Don't Miss!
- News
உச்சநீதிமன்றத்துக்கு புதிய 5 நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. . யாரெல்லாம் தெரியுமா? முழுவிபரம்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்யிடம் ஆச்சர்யப்பட வைத்த விஷயம்.. நடிகர் ஷாம் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய்யின் திரையுலக பயணம் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்திலிருந்து துவங்கியது.
பிரபல இயக்குநரின் மகனாக திரையுலகில் அவர் அடியெடுத்து வைத்தாலும் அவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடனாது.
தன்னை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் அதிகமானது.
சூப்பர்ஸ்டார் விஜய்.. இந்தியாவிலேயே சிறந்த டான்சர்.. சீமான் பேச்சு.. ப்ளூசட்டை மாறன் ட்ரோல்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் பிரபல இயக்குநரின் மகனாக இருந்து குழந்தை நட்சத்திரமாகவே அதிகமான படங்களில் நடித்தவர். விஜய்காந்த் உள்ளிட்டவர்களுடன் அவர் நடித்து வெளியான பல வெற்றிப் படங்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாக இருந்து வருகின்றன. தொடர்ந்து நாளைய தீர்ப்பு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார் விஜய்.

நெகட்டிவ் விமர்சனங்கள்
இந்தப் படத்தில் நடித்து முடித்தவுடன் அவர் சந்தித்த நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம். தன்மீதான நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவ்வாக்கும் வித்தை விஜய்க்கு கைவந்தது. தொடர்ந்து காதல் படங்களில் நடித்த அவர், ஆக்ஷன், கமர்ஷியல் என காலத்திற்கு ஏற்ப தன்னுடைய திரையுலக பயணத்தை மாற்றி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

வாரிசு படம்
பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

நட்சத்திர பட்டாளம்
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்யின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ராதிகா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள நிலையில், படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தில் விஜய் கவனம் செலுத்திவரும் நிலையில், வாரிசு படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் தற்போது மரண மாசாக வெயிட் செய்து வருகின்றனர்.

வாரிசு படத்தின் பிரமோஷன்
இந்தப் படத்தின் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் ஷாம் விஜய்யுடன் இணைந்துள்ளார். படத்தின் பிரமோஷனையொட்டி படத்தின் நடிகர்கள் பல பேட்டிகளை அளித்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடைபெற்ற நிலையில், படத்திற்கான பிரமோஷனை முழுவீச்சில் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் உயர்வுக்கு காரணம் சொல்லியுள்ளார் நடிகர் ஷாம்.

விஜய்க்கு பாராட்டு தெரிவித்த ஷாம்
படப்பிடிப்பின்போது ரிகர்சல் செய்யாமலேயே முதல் டேக்கிலேயே விஜய் நடித்துவிடுவார் என்று ஷாம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால் தான் விஜய் இந்த உயரத்தில் இருப்பதாகவும் விஜய்யின் எளிமையும் தொழில் மீது கொண்ட ஈடுபாடும் மற்றவர்களை அரவணைத்து செல்லும் குணமும் தன்னை தொடர்ந்து ஆச்சர்யப்பட வைத்து வருவதாகவும் ஷாம் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.