For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts
  Read more about: vivek விவேக்

  நெஞ்சம் கனக்கிறது.. வில் மிஸ் யூ பாஸ்.. விவேக்குடனான கல்லூரி நாட்களை பகிர்ந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி!

  |

  சென்னை: நடிகர் விவேக் உடனான கல்லூரி நாட்கள் குறித்து அவருடைய நண்பரான நடிகர் ஷிஹாவன் ஹுசைனி உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

  நடிகர் விவேக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக்.

  வயிறு வலிக்க சிரிக்க வைத்த … சிந்தனையாளன் விவேக்கின் ஸ்பெஷல் காமெடி சில !

  அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருந்த போதும் நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணிக்கு காலமானார்.

  உடல் தகனம்

  உடல் தகனம்

  விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க மேட்டுகுப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

  நடிகர் ஷிஹான் ஹுசைனி

  நடிகர் ஷிஹான் ஹுசைனி

  இந்நிலையில் நடிகர் விவேக்கின் கல்லூரி நண்பரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி விவேக் உடனான கல்லூரி நாட்கள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதிய பதிவு வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்டிருப்பதாவது,

  நெஞ்சம் கனக்கிறது!

  நெஞ்சம் கனக்கிறது!

  இந்த உலகம் ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டது. இரண்டு கல்லூரிகளில் விவேக் எனக்கு ஓராண்டு ஜூனியர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் கவிதாலயா என்ற மாபெரும் நடிப்பு கல்லூரி. எங்கள் சந்திப்பு அமெரிக்கன் கல்லுரியில் ஒரு தகராறில் ஆரம்பித்தது. "டேய் உன்னை நக்கல் பண்ணி ஒரு ஜூனியர், ஆடிட்டோரியம்லே ட்ராமா போட்டுக்கிட்டு இருக்கானாம். ஒரே கைதட்டாம். வா மச்ச்சான் போய் சாத்தலாம்னு சில பசங்க வந்து என்னை கூப்ட்டானுங்க"

  கேலி நாடகம் போட்டு

  கேலி நாடகம் போட்டு

  ஒரு மாசத்துக்கு முன்னால் தான் நான் கல்லுரியில் ஒரு மாபெரும் கராத்தே டெமோ போட்டு அது பெரிய டாக். அந்த கராத்தே டெமோவை உல்டா பண்ணி, கேலி நாடகம் போட்டு கை தட்டு வாங்கிக்கொண்டிருந்தவனை தேடி நானும் என் நண்பர்களும் கிளம்பினோம். பெரிய தகராறு நடக்க இருப்பதை உணர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் வழியில் எங்களை தடுத்து நிறுத்தினர்.

  Vijaysethupathi துக்கத்தில் கண் கலக்கியுள்ளார் | #RIPVivek
  பலமாக சிரிச்சேன்

  பலமாக சிரிச்சேன்

  நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த ஜூனியர் சமாதானம் பேச அழைக்கப்பட்டார். அங்கிருந்த பேசிரியர்களை தள்ளிவிட்டு அந்த பையன் சட்டையை புடித்தேன். என்னை நேராக பார்த்த அந்த பையன் "சார் என்னை அடிக்கணும்னா அடிங்க. உங்க டெமோ எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். என்னாலே உங்களை மாதிரி ஓடு, செங்கல் உடைக்க முடியாது.. அதனாலே அப்பளம் வைத்து உடைச்சேன்! அவ்வளவுதான் அண்ணா!" சட்டையை விட்டு பலமாக சிரிச்சேன். நாடகம் மீண்டும் தொடர்ந்தது.. நானும் அதை பார்த்து அனைவரோடு பலமான கைதட்டினேன்.

  ரொம்ப பாப்புலர்

  ரொம்ப பாப்புலர்

  அந்த பையன் தான் சில ஆண்டுக்கு பின்னால், உலகம் போற்றிய ‘நடிகர் விவேக் !'

  மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக் பெரிய ஹிட். இவர் காமெடி நாடகம் என்றாலே மாணவர்களும், ஆசிரியர்களும் மிஸ் பண்ண மாட்டார்கள். கல்லுரியில் யாரையும் விட்டு வைக்க மாட்டார். இவர் கதாகாலச்சேபம் ரொம்ப பாப்புலர். எல்லோரையம் மிமிகிரி, கிண்டல் பண்ணுவார்.

  கதைகளை விவாதிப்போம்

  கதைகளை விவாதிப்போம்

  அணைத்து கல்லூரி தமிழ் நாடக போட்டி என்றால் இவரை அனுப்புவார்கள். ஆங்கில போட்டிகளுக்கு நானும் என் குழுவும் செல்லும். எப்போதுமே நாங்கள்தான் பரிசுகளை அள்ளி செல்லுவோம். இவர் நாடகத்தை நான் மிஸ் பண்ண மாட்டேன். என் நாடகங்கள் அனைத்துக்கும் விவேக் வருவார். மிக நல்ல நண்பர்கள் ஆனோம். கல்லூரி எதிரே உள்ள ஹோட்டலில் டீ சமோசா சாப்பிட்டு மணிக்கணக்கில் கதைகளை விவாதிப்போம்.

  பாராட்டிய முதல் நபர்

  பாராட்டிய முதல் நபர்

  சினிமாவில் கே.பாலச்சந்தர் மூலமாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்று கூட்டு கனவு காண்போம். 1987 ல் ' புன்னகை மன்னன் ' படம் மூலம் பாலச்சந்தர் சார் என்னை அறிமுகப்டுத்தியபோது என்னை பாராட்டிய முதல் நபர் விவேக் தான். அதே ஆண்டு எனக்கு அடுத்ததாய் விவேக்கை பாலசந்தர் சார் ‘மனத்தில் உறுதி வேண்டும்' படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

  பல சந்திப்புகள்..

  பல சந்திப்புகள்..

  பல ஆண்டுகள்.. பல சந்திப்புகள்... அவரோடு இணைத்து நான் நடித்த முதல் மற்றும் கடைசி படம், விஜய் நடித்த 'பத்ரி!' விவேக் தமிழ் பட உலகத்தின் ஈடு இணையிலா மாபெரும் நகைசுவை நடிகர், சமூக போராளி.. படைப்பாளி.

  வில் மிஸ் யூ பாஸ்!

  வில் மிஸ் யூ பாஸ்!

  அவரது மரணம் மாபெரும் இழப்பு எனக்கும், திரை உலகத்துக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் மகன் பிரசன்னாவை இழந்து இப்போது விவேக்கை இழந்து தவிக்கும் சகோதரி அருள்செல்வி விவேக்குக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விவேக் பாஸ்.... வில் மிஸ் யூ பாஸ் !

  Read more about: vivek விவேக்
  English summary
  Actor Shihan hussaini shares his experience with Vivek on Social media. Actor Vivek passed away today due cardiac arrest.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X