மாஸ்டர் படம் எப்படி? முதல் நாளில் முதல் ஷோவை பார்த்த நடிகர் சூரி.. என்ன சொல்றாரு பாருங்க!
சென்னை: மாஸ்டர் படத்தை பார்த்த நடிகர் சூரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

இன்று ரிலீஸ்
கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் தள்ளிப்போனது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

திருவிழாக் கோலம்
காலை 4 மணிக்கு முதல் காட்சியாக படம் திரையிடப்பட்டது. இதனால் திரையங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. தியேட்டர் வாசல்களில் உள்ள கட் அவுட்டுகளுக்கு மாலை பாலபிஷேகம் என வேற லெவலில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்
சமூக வலைதளங்களிலும் படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்களே குவிந்து வருகின்றன. படம் ஃபயர் மோடில் இருப்பதாகவும் விஜய்யும் விஜய் சேதுபதிம் பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

நடிகர் சூரி கருத்து
இந்நிலையில் மதுரையில் உள்ள தியேட்டரில் மாஸ்டர் படத்தை பார்த்த நடிகர் சூரி, படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், படம் நன்றாக இருப்பதாக கூறினார்.

கலக்கியிருக்கிறார்கள்
விஜய்யும் விஜய் சேதுபதியும் கலக்கியிருக்கிறார்கள் என்றும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் நடிகர் சூரி.


Click it and Unblock the Notifications











