பீஸ்ட் ரிலீஸ் தேதி இது தானா...காமெடி நடிகரின் ட்வீட்டால் அதிரும் சோஷியல் மீடியா
சென்னை : கடந்த சில நாட்களாகவே பீஸ்ட் ரிலீஸ் தேதி, பீஸ்ட் ஆடியோ வெளியீடு பற்றிய தகவல்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில் காமெடி நடிகர் ஒருவர், அதிலும் விஜய்க்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவரே பீஸ்ட் ரிலீஸ் தேதி பற்றி ட்வீட் போட்டிருப்பது பரபரப்பாகி உள்ளது.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் படத்தின் டைட்டிலுடன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டன.

ஸ்டிராங்காக குத்திய அரபிக்குத்து
அதற்கு பிறகு பீஸ்ட் படம் பற்றிய அப்டேட் ஏதும் வெளியாகாததால் ரசிகர்கள் செம கடுப்பாகினர். ஃபஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காதலர் தின ஸ்பெஷலாக அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடிய இந்த பாடல் யூட்யூப்பில் மிகப் பெரிய சாதனை படைத்து வருகிறது. இதுவரை 150 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. விரைவில் 200 மில்லியன் பார்வைகள் என்ற சாதனையை நெருங்க உள்ளது.

யாரையும் விட்டு வைக்கல
உலகிலேயே மிக குறுகிய நாட்களில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் அரபிக்குத்து பாடலும் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களை மட்டுமல்ல பிரபலங்கள் அனைவரையும் இந்த பாடல் கவர்ந்துள்ளது. அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி, வீடியோ வெளியிடாத பிரபலமே இல்லை என சொல்லும் அளவிற்கு டைரக்டர்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு விட்டனர்.

பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் எப்போ
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியிடப்படும், ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். அடுத்த அப்டேட்டாக படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய அப்டேட் போஸ்டர் அல்லது வீடியோ உடன் வெளியிடப்பட உள்ளதாம். இதில் படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெற்றிருக்குமாம். பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 20ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற உள்ளதாம். இந்த ஆடியோ வெளியீட்டு விழா சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம்.

பீஸ்ட் ரிலீஸ் தேதி உண்மையா
பீஸ்ட் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக இதுவரை கூறி வந்தனர். ஆனால் தற்போது ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் படம் ரிலீசாக உள்ளதாக பலரும் ட்விட்டரில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவலை விஜய்யின் நண்பரும், காமெடி நடிகருமான ஸ்ரீகாந்த்தும் பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 13 மச்சான் விஜய் கலக்கு என அவர் போஸ்ட் போட்டுள்ளார். இதனை பலர் லைக் செய்தாலும், பலர் இது அவரின் ஐடி கிடையாது. போலி ஐடி என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











