அவரு ஏன் விக் போடுறாரு? ரசிகரின் கேள்வியால் திக்கி திணறி மழுப்பல் பதில் கூறிய பிரபல நடிகர்!

சென்னை: நடிகர் விஜய் ஏன் விக் அணிகிறார் என்ற கேள்விக்கு மாஸ்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் திக்கி திணறி கூறிய மழுப்பல் பதில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இதில் கல்லூரி பேராசிரியராக நடிகர் விஜய் நடித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

கோட் சூட்

கோட் சூட்

மேலும் ஷாந்தனு, ஸ்ரீமண், ஆண்ட்ரியா, விஜே ரம்யா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் பங்கேற்றார். கறுப்பு நிற கோட் சூட்டில் செம கெத்தாய் பங்கேற்றிருந்தார்.

விக் போட்ருக்கார்

விக் போட்ருக்கார்

அப்போது அவரது ஹேர் ஸ்டைலை பார்த்த நெட்டிசன்கள் விஜய் விக் அணிந்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சில ஆகாத நெட்டிசன்கள் அதனை ட்ரோல் செய்தனர். இந்நிலையில் நடிகர் விஜயின் நண்பரும் மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவருமான நடிகர் ஸ்ரீமண் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இருக்கலாம்...

இருக்கலாம்...

அப்போது சார் விஜிமா ஏன் விக் அணிகிறார் என கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகர் ஸ்ரீமண், இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அவர் எதை செய்தாலும் அது படக்குழுவினரால் வடிவமைக்கப்பட்டதாகதான் இருக்கும். புரோ படம் பாருங்க.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. வெறும் அமைதி மட்டும் தான். கொரோனாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மாஸ்டர் படத்தில் என் நண்பன் விஜியை உங்களுக்கு பிடிக்கும் என்று இவ்வாறு மழுப்பலாக பதில் கூறினார்.

விஜயின் நெருங்கிய நண்பர்

விஜயின் நெருங்கிய நண்பர்

நடிகர் ஸ்ரீமண், நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் ஆவார். விஜயுடன் இணைந்து லவ் டுடே, நெஞ்சினிலே, நிலாவே வா, சுறா, வசீகரா, பிரன்ட்ஸ், அழகிய தமிழ் மகன், போக்கிரி, பைரவா, வில்லு, சுக்ரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் இல்லாததால் விளம்பர படங்களில் நடித்து வந்த ஸ்ரீமண் தற்போது மாஸ்டர் படத்திலும் விஜயுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X