Don't Miss!
- Lifestyle
வீக்கத்தைத் தடுக்க குளிர்காலத்தில் இந்த 5 உணவுகள நீங்க சாப்பிடவே கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News
சீனாவின் "மெகா அணை.." அதுவும் எல்லைக்கு மிக அருகில்.. இந்தியாவுக்கு இதனால் என்ன ஆபத்து? பகீர்
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Finance
தங்கம் விலை 3 மாதத்திற்குள் ரூ.6000 ஏற்றம்.. புதிய புதிய வரலாற்று உச்சம்.. இனி என்னவாகும்?
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Sports
நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
சூர்யா 42 அப்டேட் வருதா?.. இயக்குநர் இவரா? சமூக வலைதளங்களில் வைரலாகும் அப்டேட் தகவல்கள்!
சென்னை : நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இன்றைய தினம் விருமன் படம் ரிலீசாகி நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Recommended Video
இதனிடையே அவர் தனது சூர்யா 41 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
இதையடுத்து வாடிவாசலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக அவர் இயக்குநர் சிவாவுடன் தனது சூர்யா 42 படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருமன்
முதல்
பொன்னியின்
செல்வன்
வரை...ரிலீசுக்கு
காத்திருக்கும்
7
மெகா
பட்ஜெட்
படங்கள்
இதோ

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பு என சிறப்பான வகையில் இரட்டை சவாரி செய்து வருகிறார். இன்றைய தினம் அவரது தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்துள்ள விருமன் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சுல்தான் படத்திற்கு பிறகு கார்த்தியின் நடிப்பில் ஏறக்குறைய ஒரு ஆண்டு கழித்து வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

விருமன் படம்
கார்த்தி
இந்தப்
படத்தில்
சண்டியராக
நடித்துள்ளார்.
பருத்தி
வீரனில்
பார்த்த
கார்த்தியை
நினைவுப்படுத்துகிறார்.
தன்னுடைய
தந்தை
பிரகாஷ்
ராஜை
அடித்த,
ஆர்கே
சுரேஷிற்கு
தங்க
மோதிரம்
பரிசளிக்கிறார்.
அந்த
நிகழ்வை
கொண்டாடுகிறார்.
இதுபோன்ற
அட்ராசிட்டிகளை
இந்தப்
படத்தில்
நிகழ்த்துகிறார்.

உறவுகளின் மகத்துவம் சொல்லும் படம்
இரு தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் காட்சிகளில் இதை காண முடிந்தது. இந்நிலையில், படம் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை வெளிப்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ள நிலையில், தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் அடுத்தடுத்த வெற்றிப் படைப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

சூரரைப் போற்று இந்தி ரீமேக்
இந்தியிலும் அக்ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று ரீமேக்கை எடுத்து வருகிறார். இந்தப் படத்தை சுதா கொங்கராவே இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் சூர்யாவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வணங்கான் படத்தின்மூலம் இணைந்துள்ளார்.

வணங்கான் படம்
இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து 35 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

சூர்யா 42 படத்தை இயக்கும் சிவா?
ஆனால் தற்போது இடையில் நுழைந்துள்ளார் இயக்குநர் சிவா. சூர்யா 42 படத்தை அவர் தான் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே இதுவரை இல்லாதவகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாக உள்ளதாம். மேலும் பீரியட் படமாக இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு
மேலும் இரண்டு பாகங்களாக உருவாக ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் மாஸாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.