Don't Miss!
- News
தாறுமாறாக வந்த ஆம்னி பேருந்து! ஹை வேஸில் அலறல்.. சென்னை-மார்த்தாண்டம் சாலையில் விபத்து.. 2 பேர் பலி
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அக்ஷய் குமாருடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் அழகு சீரியல் நடிகர்.. கிளாஸ்கோ புறப்பட்டார்!
சென்னை: அக்ஷய் குமாருடன் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் பிரபல நடிகரான தலைவாசல் விஜய்.
நடிகர் தலைவாசல் விஜய், 1992ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான தலைவாசல் படத்தின் மூலம் அறிமுகமானார். வெறும் விஜயாக இருந்த அவர் அந்த படத்தின் மூலம் தலை வாசல் விஜய் ஆனார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் விஜய்.
அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானம்.. அசால்டாக தரையிறக்கிய அஜித்.. கன்னாபின்னா வைரலில் வீடியோ!

அழகு சீரியல்
இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய் சில படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் உள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார் தலைவாசல் விஜய். சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் ரேவதிக்கு ஜோடியாக பழனிச்சாமி வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.

ஜங்க்ளி படம்
கடைசியாக மாஃபியா சாப்டர் ஒன் படத்தில் முகிலன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாருடன் பெல் பாட்டம் படத்தில் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே ஜங்க்ளி என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார் தலைவாசல் விஜய்.

அக்ஷய் குமாருடன்..
இந்நிலையில் பெல் பாட்டம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் தலைவாசல் விஜய். பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

நேற்று புறப்பட்டது
இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு லண்டனில் இந்த மாதம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு படக்குழு நேற்று மும்பையில் இருந்து புறப்பட்டடது.

தனித்துவமான அனுபவம்
அவர்களுடன் நடிகர் தலைவாசல் விஜயும் கிளாஸ்கோ புறப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்த தலைவாசல் விஜய் தற்போது படப்பிடிப்புக்காக புறப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய நடிகர் தலைவாசல் விஜய், தன்னை பொறுத்தவரை இது ஒரு தனித்துவமான அனுபவம் என கூறியுள்ளார்.

பயோ வார் மண்டலம்
இந்த தொற்று நோய் காலத்தில் விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம். முழு விமான நிலையமும் பிபிஇ சூட்ஸுடன் பயோ வார் மண்டலத்தில் இருப்பது போன்று உள்ளது. முந்தைய நாட்களைப் போன்று, விமான நிலையத்தில் எங்களை ரிஸீவ் பண்ண யாரும் இல்லை.

கட்டாய தனிமைப்படுத்தல்
நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துச் சென்று எல்லாவற்றையும் சொந்தமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளர்கள் அணியின் பாதுகாப்பிற்கான முழு திட்டத்தையும் வகுத்துள்ளார்கள். நாங்கள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவோம். நாங்கள் செட்டில் ஒரு மருத்துவரையும் வைத்திருப்போம், இவ்வாறு நடிகர் தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இந்திப் படம்
படம் குறித்து பேசிய, விஜய் தனது ரோல் குறித்து அதிகம் வெளிப்படுத்த முடியாது என்றாலும், இது ஒரு முக்கியமான நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும் என்றார். மேலும் இது ஜங்லீக்குப் பிறகு தனது இரண்டாவது நேரடியான இந்தி படம் என்றும் தான் உற்சாகமாக இருப்பதாகவும் கூறினார்.

சொல்லப்படாத உண்மைக் கதை
தான் ஒரு ஆடிஷனுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகவும் தொடர்ந்து வீட்டில் தன்னுடைய கதாபாத்திரத்தை செய்து பார்த்தேன் என்றும் கூறினார். இந்தப் படம் சொல்லப்படாத உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றும் நடிகர் தலைவாசல் விஜய் கூறினார்.