நீ தான் என் தங்கச்சி.. தூய்மை பணியாளரை அன்போடு அழைத்து புகைப்படம் எடுத்த வடிவேலு!

சென்னை: கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த தூய்மை பணியாளரை அருகே வாம்மா தங்கச்சி என அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்

Recommended Video

கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்!

வடிவேலுவுக்கு சினிமாவில் போடப்பட்டிருந்த தடைக்காலம் தற்போது முடிவடைந்து விட்டது. இதனால் அவர் மீண்டும் புதுப்பொலிவுடன் படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது வடிவேலு,நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய பழைய இடத்தை பிடிக்கவும் போராடி வருகிறார்.

Actor vadivelu took a picture cleaning staff

வைகைப் புயல்

தமிழ்த் திரைப்படத்துறையில் 'வைகைப் புயல்' என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர்.

Actor vadivelu took a picture cleaning staff

தனக்கென தனி பாணி

ப்ரண்ட்ஸ், வின்னர், சச்சின், மருதமலை எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். யார் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம்.

Actor vadivelu took a picture cleaning staff

என் தங்கச்சி

இந்லையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில், நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் நடிகர் வடிவேலுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. வடிவேலுவை பார்த்தவுடன் பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் முண்டி அடித்துக்கொண்டு அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது வடிவேலு, கோயிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை, வாம்மா நீ தான் என் தங்கச்சி எனக்கூறியபடி, ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் வடிவேலு. இந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X