எப்படி எல்லாம் கிளப்பி விடுறாங்க...வடிவேலு வேதனை

சென்னை : வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் பற்றி வெளியான வதந்திகளால் நொந்து நோய் உள்ளார் வடிவேலு. எப்படி எல்லாம் கிளப்பி விடுறாங்க என வேதனை தெரிவித்துள்ளார்

Actor Vadivelu upset on rumours about Naai Sekar returns

ரெட் கார்டு போடப்பட்டு, பல பிரச்சனைகளை தாண்டி தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் வடிவேலு. தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தை டைரக்டர் சுராஜ் இயக்கி வருகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

நான்கு ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடித்து வரும் இந்த படத்தின் வேலைகள் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தாமதமாகி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதை முடித்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த சமயத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வேலைகளை முடித்து விட்டு, அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தில் நடிக்க துவங்கி விட்டார். இந்நிலையில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், சில பிரச்சனைகளால் படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவ துவங்கி உள்ளது.

இந்த தகவல் அறிந்து நடிகர் வடிவேலு மிகவும் வேதனை தெரிவித்துள்ளார். எப்படி எல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பி உள்ளார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் எப்போது ரிலீசாகும் என அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வடிவேலுவை பெரிய திரையில் காண அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X