விஜய் பிறந்த நாள்… கோலிவுட் பிரபலங்கள் என்ன சொல்லி வாழ்த்துனாங்க தெரியுமா ?
சென்னை : நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த தினத்தை, கொண்டாடும் நிலையில், அவர் திரையுலகுக்கு வந்து தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதி என்ற பெயரில் வளர்ந்து நிற்கிறார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிகளின் மகனாக ஜோசஃப் விஜய் ஜூன் 22-ம் தேதி 1974-ம் ஆண்டு பிறந்தார்.
இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோலிவுட் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சோஷியல் மீடியாவை திணறடித்து வருகின்றனர். விஜய்க்கு யார் யார் வாழ்த்து சொல்லியிருக்காங்கனு பார்க்கலாமா?

சரத்குமார்
நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சிறப்பு நாளில் சிறந்த ஆசீர்வாதம் உங்கள் மீது பொழியட்டும், நீங்கள் நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். நடிகர் சரத்குமார், விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக நடித்து வருகிறார்.

ஹன்சிகா
தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஹன்சிகா பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார் அட்லீ இயக்கத்தில் உருவான தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் விஜய்யின் சென்டிமெண்ட் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும் அவரும் இன்று விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனிருத்
விஜய்யின் தீவிர ரசிகரான அனிருத், இரண்டு நாட்களுக்கு முன்பே பீஸ்ட் திரைப்படத்தின் பின்னணி இசையை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். விஜய்யின் பிறந்த நாளான இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் , ஐ லவ் யூ விஜய் சார் என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிருஷ்
மை டியர் விஜய் அண்ணா, எப்போதும் எங்களை ஊக்குவித்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் எப்போதும் என் சிறந்த நலன்களை இதயத்தில் வைத்திருக்கிறீர்கள், அது உலகம் என்று அர்த்தம்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா... Love u Loads..

ராகவா லாரன்ஸ்
நடன இயக்குநர்,நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மீரா ஜாஸ்மீன்
நடிகை மீரா ஜாஸ்மீன் புதிய கீதை திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து, தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.
Sila perin peyar-dhan oru aalumai perumaame!🔥 Wishing our dearest #Thalapathy actorvijay a very Happy Birthday!
— Sun Pictures (sunpictures) June 21, 2022
#HBDVijay #HappyBirthdayVijay pic.twitter.com/bNvYr76ifn
சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பீஸ்ட் திரைப்படத்தில் வரும் திரை தீ பிடிக்கும் பாடலின் பின்னணியில் பல வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், சில பேரின் பெயர்-தான் ஒரு ஆளுமை பெருமாமே என குறிப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. விஜய்யின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் #HBDThalapathyVijay என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர். அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











