Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ம்ம்... வேற லெவல்... பாராட்டிய விஜய்... யாரைத் தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 13ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது பீஸ்ட். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் கோடிக்கணக்கான வியூசையும் அள்ளியுள்ளது.
பிரேம்ஜியின்
மன்மத
லீலை...
பதிலுக்கு
பதில்
வம்பிழுத்த
வெங்கட்
பிரபு...
என்னங்க
ரகளை
இது!

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 13ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். இதையடுத்து ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு
விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் சூட்டிங் துவங்கிய காலக்கட்டத்திலிருந்தே ரசிகர்கள் தொடர்ந்து படத்தின் அப்டேட்டிற்காக படக்குழுவை கேட்டு வந்தனர். அதற்கேற்ப அவர்களுக்கு தீனி போடும் வகையில் தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என சன் பிக்சர்ஸ் கொடுத்து வருகிறது.

பட்டையை கிளப்பிவரும் பாடல்கள்
படத்தின் இரண்டு போடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன. கோடிக்கணக்கான வியூஸ்களை அள்ளியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென ரசிகர்கள் தொடர்ந்து கொல மாசுடன் காத்திருக்கின்றனர்படத்தின் இரண்டு போடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறார். கோடிக்கணக்கான வியூஸ்களை அள்ளியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென ரசிகர்கள் தொடர்ந்து கொல மாசுடன் காத்திருக்கின்றனர்.

திருவிழாக் கொண்டாட்டம்
படம் வரும் 13ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் படத்தை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர். இந்த திருவிழாவிற்கான பந்தகாலை இன்றைய தினம் ரசிகர்கள் நட்டு அதிரடி கிளப்பியுள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இன்றைய தினம் வெளியாக உள்ள ட்ரெயிலர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 மில்லியன் வியூஸ்
இந்நிலையில் படத்தின் முதல் பாடலாக வெளியான அரபிக்குத்து பாடல் தொடர்ந்து 25 மில்லியன் வியூஸ்களை கடந்து தொடர்ந்து பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் பாடலுக்கு அரபிக்குத்து என்று பெயரிடப்பட்டது. அதற்கேற்றாற்போல பாடல் அரேபிய மொழியில் வெளியானது.

அரேபிய கான்செப்ட்
படத்தின் பாடல், நடனம் என்று அனைத்துமே அரேபிய கான்செப்டை ஒட்டி வெளியானது. பாடலுக்கான லிரிக்சை எழுதியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். பாடலுக்கான செட்டும் அரேபிய பாணியில் இருந்தது. மிகவும் பிரம்மாண்டமாக வித்தியாசமான லைட்டிங்குடன் இந்தப் பாடல் காணப்பட்டது.

ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண்
இந்தப் பாடலுக்கான செட்டை அமைத்திருந்தார் டிஆர்கே கிரண். இந்த செட்டிற்கான ஐடியாவை கொடுத்தது இயக்குநர் நெல்சன் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த செட் உருவாக்கப்பட்டதாகவும் இதை பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே வடிவமைக்க முடியும் என்றும் கிரண் தெரிவித்துள்ளார்.

25 நாட்கள் சூட்டிங்
மேலும் இந்த செட் போடப்பட்டு 25 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டதாகவும் 200 கலைஞர்கள் இதில் பணிபுரிந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். நாம் செலவு செய்யும் அதிகமான பட்ஜெட் ஸ்கிரீனில் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹீரோ, ஹீரோயின் அனைவரையும் கவரவேண்டும் என்றும் தான் கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக விஜய்யுடன் கிரண்
தான் முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளதாகவும் முதல் செட் அரபிக்குத்து பாடலுக்கானதுதான் என்றும் கூறிய கிரண், விஜய் இந்த செட்டை பார்த்துவிட்டு ம்ம் என்று தன்னை பாராட்டியதாகவும் அவரின் இந்த கமெண்ட் தன்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டுக்குள்ளான செட்
பயங்கரமாகவும் சூப்பராகவும் உள்ளதாக விஜய் முதலில் கூறியபோது தன்னை அவர் கலாய்ப்பதாக தான் நினைத்ததாகவும் கிரண் தெரிவித்துள்ளார். பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என்று தான் கூறியதாகவும் ஆனால் தன்னுடைய செட்டை அனைவரும் கவனித்து பாராட்டுவார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.