twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையமைப்பாளர் D இம்மானுக்கு டெஸ்ட் வைத்த விஜய்... இம்மானின் பதிலடியால் மகிழ்ச்சி!

    |

    சென்னை: நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மை டியர் பூதம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் D இம்மான் தான் இசையமைத்துள்ளார்.

    இருட்டு அறையில் மொரட்டுக் குத்து, ஹர ஹர மகாதேவகி திரைப்படங்களை இயக்கிய சந்தோஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை படத்திற்கும் இம்மான் தான் இசை.

    பிரபுதேவா படம் என்பதால், மாஸ்டர் ஓ மை மாஸ்டர் பாடலை ஃபாஸ்ட் நம்பராக இசையமைத்துக் கொடுத்தாராம் இம்மான். ஆனால் லாக்டவுன் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆடாமல் இருந்த பிரபுதேவா சிறிது சிரமப்பட்டுதான் அந்தப் பாடலுக்கு ஆடியதாக கூறியுள்ளார்.

    தூய்மை, தாய்மை, காதல், கடவுள்.. பார்த்திபனின் கேள்விகளுக்கு இசையால் பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்! தூய்மை, தாய்மை, காதல், கடவுள்.. பார்த்திபனின் கேள்விகளுக்கு இசையால் பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

    முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் என்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்துள்ள இம்மான், இதுவரை நடிகர் கமல்ஹாசன் படத்துக்கு இசைமைக்கவில்லை.. இருப்பினும் அவருடன் நடந்த இரண்டு சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார். மைனா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த கமல், இந்தப் படத்திற்கு இரண்டு DI நடந்துள்ளது. ஒன்று DI எனப்படும் கலர் கரெக்ஷன். இன்னொன்று D இம்மானின் இசை என்று கூறினாராம். அதேபோல் கும்கி இசை வெளியீட்டு விழாவிற்கும் வந்திருந்தார். அவரும் ரஜினி சாரும் வந்ததால், வர்த்தக ரீதியாக உதவியது என்றும் இம்மான் கூரியுள்ளார்.

    தமிழன் பின்னணி இசை

    தமிழன் பின்னணி இசை

    தமிழன் படத்தில் முதன் முதலாக இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன போது அவருக்கு 19 வயது. டியூன் நன்றாக போடுகிறார். ஆனால் பின்னணி இசைக்கு அனுபவம் தேவை. படத்தில் ஒப்பந்தம் ஆன போதே, ஒரு கண்டீஷன் போட்டார்களாம் படக்குழுவினர். படத்தின் ஒரு ரீலை கொடுப்போம். அதற்கு பின்னணி இசை அமையுங்கள். நன்றாக இருந்தால் பார்க்கலாம். இல்லையென்றால் வேறொரு முன்னணி இசையமைப்பாளரை வைத்து பின்னணி இசை மட்டும் செய்து கொள்கிறோம் என்பது அந்த கண்டீஷன்.

    டெஸ்ட்டில் பாஸ்

    டெஸ்ட்டில் பாஸ்

    சீரியல் டைட்டில் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் என்றுதான் தமிழன் படக்குழுவினருக்கு தெரியுமாம். ஆனால் பல எபிசோடுகளுக்கு பின்னணி இசையும் இளம் வயதிலேயே அமைத்திருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரியாதாம். படத்தின் முதல் ரீல் வந்ததும், தனது அனுபவத்தை வைத்து பின்னணி இசை அமைத்திருக்கிறார் இம்மான். அதனை பார்க்க, இயக்குநர், தயாரிப்பாளர், விஜய் மற்றும் இன்னும் சிலரும் வந்திருக்கிறார்கள். 20 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு ரீலில் சில காட்சிகளை மட்டுமே பார்த்துவிட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முழு ரீலை கூட பார்க்காமல், நீங்களே இசையமைத்துவிடுங்கள் என்று பாராட்டிவிட்டு சென்றார்களாம்.

    விஸ்வாசமும் தேசிய விருதும்

    விஸ்வாசமும் தேசிய விருதும்

    அதே போல முதன் முதலாக அஜித் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனபோதும், பெரிய நடிகர் என்பதால் தலையீடு இருக்குமோ என்று நினைத்தாராம் இம்மான். ஆனால் ஒவ்வொரு பாடலுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்ததாகவும். படக்குழுவினரையே பாஸிட்டிவாக நடத்தியதாகவும் கூறியுள்ளார். அந்தப் படத்திற்காக தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது, அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி மற்றும் நயன்தாரா முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார் இயக்குநர் சிவா என்று இம்மான் கூறியுள்ளார்.

    English summary
    Actor Vijay happy with the Test Given to Music Director D Imman
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X