Just In
- 5 min ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 1 hr ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 2 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 2 hrs ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
Don't Miss!
- Finance
முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்.. குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர்..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- News
மனித உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை... மக்கள் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியீடு..!
- Automobiles
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகுகிறது
- Lifestyle
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தளபதி 63: பர்ஸ்ட் லுக்குகளில் பட்டைய கிளப்பும் விஜய்.. கொஞ்சம் இங்க பாருங்க!
சென்னை: தளபதி விஜய் பிறந்த நாள் நாளை, 22ம் தேதி, கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரின் ரசிகர்களுக்கு இன்று மாலை, அறுசுவை விருந்து படைக்கிறது 'தளபதி 63' படக்குழு.
ஆமாங்க.. இன்றுதான், தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. அட்லி இயக்கத்தில் ஏற்கனவே, தெறி மற்றும் மெர்சல், மெகா ஹிட்டடித்த நிலையில், இப்போ, 3வது ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துள்ளது ரசிகர் பட்டாளம்.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தளபதி 63 முதல் லுக் போஸ்டர் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூட்டோடு, நாளை 22ம் தேதி, 2வது லுக்கையும் வெளியிடப்போவதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படத்தோட டீம்.

எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு
விஜய் இதற்கு முன்பு நடத்த படங்களின் பர்ஸ்ட் லுக் வெளியானதுமே, இணையதளத்தில் வைரலாகியது வரலாறு. இன்று வெளியாகும் தளபதி 63 பர்ஸ்ட் லுக்கும், பழைய சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிப்போயுள்ளது. இந்த சமயத்தில், விஜய் நடித்து வெளியான கடந்த 3 திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக் எப்படி இருந்தது என உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாமா?

ஸ்டைலிஷ் லுக்
இதுதாங்க, சர்கார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக். விஜய், தனது வாயில் சிகரெட் வைத்தபடி, லைட்டருடன் இருக்கும் காட்சி அது. துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு, ஏறத்தாழ அதே ஸ்டைலிஷ் கெட்டப்பில், இதில் விஜய் காட்சியளித்து, ரசிகர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்தார்.
ஜல்லிக்கட்டு காளையுடன் துள்ளி வந்த விஜய்
பின்னணியில் ஜல்லிக்கட்டு காளைகள், நெற்றியில் விபூதி குங்குமம், வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என மெர்சல் படத்தின் முதல் லுக்கில் மாஸ் காட்டினார் விஜய். தமிழரின் மண்மணத்தோடு வரப்போகும் படம் என்று அப்போதே கட்டியம் கட்டி கூறியது இந்த பர்ஸ்ட் லுக்.
|
ரிக்ஷாவில் வந்த பைரவா
ரிக்ஷா மீது சன் கிளாஸ் அணிந்து கொண்டு, இடதுகாலை தூக்கி வைத்தபடி வித்தியாசமான ஸ்டைலிஷ் லுக்கில், பர்ஸ்ட் லுக் காட்சியளித்தார் விஜய். அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைலும் ரசிகர்களை ஈர்க்க தவறவில்லை. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம், காட்சிய விஜய், இன்று தரப்போகும் விஸ்வரூபத்திற்காக வழிமீது விழி வைத்து காத்துள்ளனர் ரசிகர்கள்.