Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முடிந்தது வாரிசு படத்தின் சென்சார் .. என்ன சான்றிதழ் கிடைத்தது தெரியுமா .. தெரிஞ்சுக்கலாம் வாங்க!
சென்னை : பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் வாரிசு படம் இன்னும் சில தினங்களில் பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது.
பீஸ்ட் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ரிலீஸ் ஆன நிலையில் அந்த படம் ரசிகர்களை கவர தவறியது.
இதனிடையே வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தற்போது வாரிசு படத்தில் நடித்த முடித்துள்ளார் நடிகர் விஜய்.
Thunivu Trailer: பீஸ்ட் சாதனையை முந்தியதா துணிவு ட்ரெய்லர்? 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ்!

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களை தன்னுடைய படங்கள் மூலம் என்டர்டெயின் செய்ய தவறியதில்லை. அவரது படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் சேர்த்து கொடுத்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்ற போதிலும் வசூல்மழையை பொழிந்தது. இந்நிலையில் தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது.

நாளை வெளியாகும் ட்ரெயிலர்
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் அடுத்ததாக நாளைய தினம் படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அப்டேட் வெளியிட்டுள்ளது. படத்தில் சரத்குமார், ராதிகா, குஷ்பூ, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் இணைந்துள்ளது. பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக விஜய்யின் வாய்சில் வெளியாகியுள்ள ரஞ்சிதமே பாடல் அதிகமான வியூஸ் மற்றும் லைக்சை தட்டித் தூக்கியுள்ளது. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள போதிலும் படத்தில் விஜய் படங்களுக்கே உரிய காமெடி, ஆக்ஷன் உள்ளிட்டவையும் தூக்கலாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விஜய்யின் முந்தைய படங்களை பீட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் படத்துடன் மோதும் வாரிசு
இந்தப் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுவதற்கு காரணம், படம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படத்துடன் மோதவுள்ளது. அஜித்தின் துணிவு படம் மற்றும் விஜய்யின் வாரிசு படம் இரண்டும் பொங்கலையொட்டி அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ள நிலையில், இரண்டு படங்களில் எந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று தற்போதே பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.

வாரிசு படத்திற்கு யூ சான்றிதழ்
வாரிசு படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது படத்தின் சென்சார் முடிக்கப்பட்டு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அஜித்தின் துணிவு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் விஜய் படத்திற்கு தற்போது யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் படத்தின் ரன்டைமும் அறிவிக்கப்பட்டுள்ளது. படம் 2 மணிநேரம் 49 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சான்றிதழ், ரன்டைம் மற்றும் ட்ரெயிலர் குறித்த அப்டேட்கள் விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தளபதி 67 படம்
வாரிசு படத்தின் ரிலீஸ் குறித்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருந்தாலும் ஒருபுறம் தளபதி 67 படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது அவர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. இத்நப் படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அது சாத்தியமானால், இந்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.