விஜய்யின் வாரிசு படத்தோட ஓடிடி ரைட்ஸ்.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. எதுன்னு தெரியுமா!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களின் படத்தின் சூட்டிங் நிறைவு பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியானதோடு அடுத்தடுத்த அப்டேட்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விரைவில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ஜெயசுதா, ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் வாரிசு. குடும்ப சென்டிமெண்ட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது இந்தப் படம்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

விஜய் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் 3 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய், தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணியின் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தளபதி 67 படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பரில் சூட்டிங்

டிசம்பரில் சூட்டிங்

இந்த வில்லன் கேரக்டர்களில் சஞ்சய் தத், பிரித்வி, கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் த்ரிஷா, சமந்தா உள்ளிட்டவர்களும் படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் டிசம்பரில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்றுத் தீர்ந்த உரிமைகள்

விற்றுத் தீர்ந்த உரிமைகள்

படம் குறித்த அறிவிப்பு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்கள் 250 கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் அறிவிப்புக்கு முன்னதாகவே இந்தப் படம் கல்லா கட்டியுள்ளது.

வாரிசு ஓடிடி ரைட்ஸ்

வாரிசு ஓடிடி ரைட்ஸ்

இதனிடையே தற்போது உருவாகிவரும் விஜய்யின் வாரிசு படத்தின் ஓடிடி ரைட்சை பிரபல அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விஜய் படங்களில் இல்லாதவகையில் மிகப்பெரிய தொகைக்கு கைமாறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X