»   »  தமிழ் சினிமாவின் ஃபேவரைட் நடிகர் விஜய்! இது 'ஒன்இந்தியா தமிழ்' டிவிட்டர் வாசகர்களின் தேர்வு

தமிழ் சினிமாவின் ஃபேவரைட் நடிகர் விஜய்! இது 'ஒன்இந்தியா தமிழ்' டிவிட்டர் வாசகர்களின் தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் ஃபேவரைட் நடிகர் என ஒன்இந்தியா டிவிட்டர் வாசகர்களில் பெரும்பாலானோர் விஜயை தேர்ந்தெடுத்துள்ளனர். இரண்டாவது இடம் அஜித்துக்கு கிடைத்துள்ளது.

சமீபத்தில் ஒரு நாளிதழ் கடந்த வருடத்தின் ஃபேவரைட் ஸ்டார் யார் என போட்டி நடத்தியது. அதில் தனுஷ் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அந்த போட்டியில் வெற்றி பெற்றது விஜய் என்றும், அவர் பேட்டியளிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், தனுஷை அறிவித்துவிட்டார்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கருத்துக்கணிப்பு

இந்த பரபரப்புக்கு நடுவே மனம் கவர்த்த ஃபேவரைட் நடிகர் யார் என்று கேட்டு ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது ஒன்இந்தியாதமிழ் டிவிட்டர் பக்கம்.

24 மணி நேரம்

24 மணி நேரம்

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் திங்கள்கிழமை காலை 9.30 மணி வரையிலான 24 மணி நேர இடைவெளியில் இக்கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது.

வாக்குபதிவு

வாக்குபதிவு

ஒன்இந்தியாதமிழ் டிவிட்டர் பக்கத்தை முக்கால் லட்சம் பேர் ஃபாலோ செய்யும் நிலையில், இதில் 4696 பேர் வாக்களித்திருந்தனர். இது வெளிப்படையான வாக்களிப்பு முறை என்பதால் ரிசல்ட் எல்லோருக்கும் தெரியும் வகையில் இடம்பிடித்தது.

ரஜினி, கமல் இல்லை

ரஜினி, கமல் இல்லை

ஃபேவரைட் நடிகர்கள் யார் என்பதில் ரஜினி, கமல் போன்ற சீனியர்கள் பெயர் தரப்படவில்லை. அஜித், விஜய், தனுஷ் மற்றும் அவரது போட்டியாளராக ரசிகர்கள் கருதும் சிம்பு ஆகிய நால்வர் பெயர்கள் மட்டும் தரப்பட்டன.

சூர்யா, விக்ரம் இல்லை

சூர்யா, விக்ரம் இல்லை

சர்ச்சையில் தனுஷ் பெயர் இருந்ததால் அவரது பெயர் ஆப்ஷனாக தரப்பட்டது. எனவே சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் போன்றோர் பெயர்கள் இடம்பெறவில்லை.

விஜய்க்கு முதலிடம்

விஜய்க்கு முதலிடம்

கணிப்பு முடிவில் 53 சதவீதம்பேர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதன்மூலம் டிவிட்டர் உலகில் விஜய்க்கு இருக்கும் ஆதரவை புரிந்து கொள்ள முடிந்தது.

அஜித்துக்கு 2வது இடம்

அஜித்துக்கு 2வது இடம்

விஜய்க்கு அடுத்தபடியாக அஜித் 33 சதவீத வாக்குகளை பெற்று 2வது இடம் பிடித்தார். ஆனால் தனுஷ் 7 சதவீத வாக்குகளை பெற்று அதற்கு சமமான சதவீத வாக்கு பெற்ற சிம்புவுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

மனநிலை மாற்றம்

மனநிலை மாற்றம்

நாளிதழ்கள் வாசிப்போர் மனநிலையும், இணையதளத்திலுள்ளோர் மனநிலையும் மாறுபட்டு காணப்படுவது விஜய் மற்றும் தனுஷ் நடுவேயான வாக்குகள் வித்தியாசத்தின் மூலம் தெரியவருகிறது.

English summary
Actor Vijay selected as the favorite star in the Twitter poll conducted by Oneindiatamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil