சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

சென்னை: இந்த வருட முதல் பாதியில் வெளிவர உள்ள பல படங்கள் சம்மர் ரிலீஸை டார்கெட் செய்துள்ளது.

அந்த விதத்தில் அதிகபட்சமாக நடிகர் விஜய் சேதுபதியின் 4 படங்கள் சம்மரில் வெளிவரவுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 3 படங்களும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 14 வெளியீடு

ஏப்ரல் 14 வெளியீடு

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'.
இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஏப்ரல்14 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 30 வெளியீடு

ஏப்ரல் 30 வெளியீடு

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் "லாபம்". இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படத்தைஏப்ரல் 30ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மே 14 வெளியீடு

மே 14 வெளியீடு

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக், இயக்குநர் மோகன்ராஜா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் "யாதும் ஊரே யாவரும் கேளீர்".இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மே 14 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மே 28 வெளியீடு

மே 28 வெளியீடு

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்
"மாமனிதன்". இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னரே முடிந்த நிலையில், படத்தை மே 28 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X