நடிகர் விக்ரம் அடுத்து நடிக்கப்போவது இவரது கூட்டணியிலா... கோலிவுட்டை கலக்கும் ஹாட் தகவல்!

சென்னை: நடிகர் விக்ரம் அடுத்து பிரபல இயக்குநர் ஒருவருடன் இணைய உள்ளதாக தகவல்கள் றெக்கைக்கட்டி பறந்து வருகிறது.

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனது கதாப்பாத்திரத்திற்காக எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுக்க தயங்காதவர்.

தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

பா ரஞ்சித்துடன் கூட்டணி

பா ரஞ்சித்துடன் கூட்டணி

இந்நிலையில் இந்தப் படங்களை தொடர்ந்து தனது புதிய படத்தில் பிரபல இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த படைப்பில் விக்ரமுடன்

அடுத்த படைப்பில் விக்ரமுடன்

பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. அமேஸான் பிரைம்மில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பா ரஞ்சித் தனது அடுத்த படைப்பில் விக்ரமை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 விக்ரமின் 61வது படம்

விக்ரமின் 61வது படம்

இயக்குநர் பா ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் குதிரைவால், ரைட்டர் போன்ற படங்களையும் தயாரித்து வருகிறார் பா ரஞ்சித். நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் நடிக்கும் 61வது படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெருக்குரல் அறிவு

தெருக்குரல் அறிவு

மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பா ரஞ்சித் தனது படங்களுக்கு சந்தோஷ் நாராயணனைதான் ஆஸ்தான இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார். என்ஜாய் எஞ்சாமி பாடலின் புரமோஷன் பணிகளில் தெருக்குரல் அறிவு ஓரங்கட்டப்பட்டதால் பா ரஞ்சித்துக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

டென்மா இசையில்

டென்மா இசையில்

தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்பட்டதற்கு பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பா ரஞ்சித் தனது நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு 'காஸ்ட்லஸ் கலெக்டிவ்' குழுவின் இசையமைப்பாளரான டென்மா இசையமைத்து வருகிறார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் தனது அடுத்தப்படத்திலும் சந்தோஷ் நாராயணனை புறக்கணித்துள்ளார் பா ரஞ்சித். விக்ரமை வைத்து தான் இயக்கவுள்ள படத்திற்கு இளையராஜாவை அணுக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X