Vishal Engagement: விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது தெரியுமா?
சென்னை: நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வந்த நிலையில் இன்று இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது. அதன் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தேன். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஆகஸ்ட் 29ந் தேதி தன்னுடைய பிறந்த நாளில், தனது காதல் குறித்தும், திருமணம் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன் என நடிகர் விஷால் கூறியிருந்தார். விஷால் இப்படி சொன்னது பலரும் இணையத்தில் யார் அந்த பெண் என ஆராயத் தொடங்கினார்.

நடிகர் விஷால் : இதையடுத்து, நடிகை சாய் தன்ஷிகா நடித்த 'யோகி டா' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் தன்ஷிகா, நானும் விஷாலும் காதலிக்கிறோம். இந்த மேடை திருமண அறிவிப்பு மேடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் விஷாலும் 15 வருட நண்பர்களாக இருந்தோம். இப்போது காதலர்களாக மாறி இருக்கிறோம். இதற்கு மேல் மறைக்க முடியாது, நடிகர் சங்க கட்டிடம் ஆகஸ்ட் 15ந் தேதி திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் பின் ஆகஸ்ட் 29ந் தேதி விஷாலின் பிறந்த நாள் அன்று திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இன்று நிச்சயதார்த்தம்: விஷாலின் பிறந்த நாளான இன்று அண்ணா நகரில் உள்ள விஷாலின் வீட்டில் விஷால், சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் விஷாலின் பெற்றோர், தன்ஷிகாவின் பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அந்த போட்டோவை நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 48 வயதான விஷால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தனது பிறந்த நாள் அதுவுமாக மகிழ்ச்சியான செய்தியை சொல்லி இருக்கிறார். இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











