Vishal Birthday: தாலாட்டு நாள் இன்னைக்கு.. தாலி கட்டும் நாளை அறிவிக்கவுள்ள விஷால்.. ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருப்பவர் விஷால். கருப்பு நிறத்தில் திரையில் தோன்றி வெற்றிகளைக் குவித்த நடிகர்களில் விஷாலும் ஒருவர். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள விஷால், இன்று அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் இந்த பிறந்த நாளில் தனது திருமண நாளை அறிவிக்க உள்ளார் விஷால். அவர் எப்போது அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இருக்கும் முரட்டு சிங்கிள்களில் ஒருவராக அறியப்படுபவர் நடிகர் விஷால். விஷால் முரட்டு சிங்கிளாக இருக்க வேறு யாரும் காரணம் இல்லை, அவரேதான் காரணம். தற்போது நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ள விஷால், இந்த பதவிக்கு போட்டி போட்டபோதே, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின்னர் தான், தனக்கு திருமணம் என்று அறிவித்திருந்தார். இவருடன் இணைந்து அறிவித்த நடிகர் ஆர்யா, திருமணம் செய்து கொண்டு, ஒரு மகளுக்கு அப்பாவாகவே ஆகிவிட்டார். இப்படியான நிலையில், நடிகர் சங்க கட்டிடம் தற்போது கிட்டத்தட்ட தயாராகி விட்டது என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட, நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான வீடியோ வெளியானது. நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது.

காதலி சாய் தன்ஷிகா: சில மாதங்களுக்கு முன்னர் விஷால் தான் திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்பதை திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார். நடிகை சாய் தன்ஷிகாவின் யோகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷாலும் சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. விஷால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சில நடிகைகளுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண தேதி: இவர் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்த தகவல் விஷால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் விஷாலுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியை பல இடங்களில் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். யோகி படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் கூட விஷாலின் 48வது பிறந்த நாளில் திருமண தேதியை அறிவிப்பதாக அறிவித்திருந்தார்கள்.

சீக்கிரமே குடும்பஸ்தன்: இன்று விஷால் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்,. இதில் மிகவும் முக்கியமான விஷயம் இன்று அவர் தனது திருமணத் தேதியை அறிவிக்க உள்ளார் என்பதால் விஷாலின் சமூக வலைதள பக்கம் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் சமூக வலைதளப் பக்கத்தை ரசிகர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். எப்படியும் 2025இல் விஷால் தாலி கட்டி விடுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். சீக்கிரமே குடும்பஸ்தனாக மாற விஷாலுக்கு இந்த பிறந்த நாளில் எங்கள் தரப்பில் இருந்தும் பெரிய வாழ்த்து ஒன்று பார்சல்.


Click it and Unblock the Notifications











