TVK Vijay Stampede : முட்டாள்தனம்.. அப்பாவி உயிர்கள் போச்சே.. இழப்பீடு கொடுங்க விஜய்.. விளாசி விட்ட விஷால்!

கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று, அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது, அவரது கட்சியின் தொண்டர்கள், அவரது ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் என மொத்தம் 39 உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக நடிகர் விஷால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " இது முழுக்க முழுக்க முட்டாள்தனம். நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை கேள்விப்பட்டு மனம் வேதனை அடைகிறது.இந்த உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்களுக்கு எனது வருத்தங்கள். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Actor Vishal Condemns TVK Vijay For Karur Stampede Deaths

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது, கட்சியின் தரப்பில் இருந்து செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியாக இருக்கும் என்பதால், தயவுசெய்து இழப்பீடு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நடைபெறும் எந்த ஒரு அரசியல் பேரணிகளில், இனிமேலாவது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஷால் மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். அதாவது, நடிகர் ஹரீஷ் கல்யாண், " கரூரில், உயிர்களை இழந்த துயரச் செய்தி மனதை பதற வைக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Actor Vishal Condemns TVK Vijay For Karur Stampede Deaths

இந்த துயரச் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த 39 பேரில் பெண்கள் 17 பேர், ஆண்கள் 12 பேர், குழந்தைகளில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகள் என அடக்கம் என்பது வேதனைக்குரியது. இது மட்டும் இல்லாமல் மேலும் 21 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X