»   »  தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி - விஷால் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி - விஷால் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எங்களது அணி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து வடபழனியில் இன்று செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் எனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Actor Vishal says, his team Participation to producer council elections

தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் யாருக்கும் எதிராக நான் செயல்படவில்லை, வார இதழுக்கு தான் அளித்த பேட்டியில் தவறாகவோ, யாரையும் புண்படுத்தும் நோக்கிலும் எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற வேண்டும். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது தெரியாது. தேர்தல் நடந்தால் நிச்சயம் எங்களது அணி போட்டியிடும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vishal has announcement, his team Participation to producer council elections

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil