Vishal: மாப்பிள்ளை விஷால் ரெடி.. கல்யாணம் எப்போது? கை நடுங்குதுனு யாராவது சொல்லுவாங்க? ஒர்க் அவுட் வீடியோ!

சென்னை: நடிகர் விஷால் வரும் 29ஆம் தேதி தனது 48வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். அன்றைய தினத்தில் அவர், எப்போது நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்ற தேதியை அறிவிக்கவுள்ளார். இப்படி இருக்கும்போது திருமண தேதியை அறிவிக்க இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது எனும் போது, அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மாப்பிள்ளை ரெடி ஆயிட்டாரு எப்போது கல்யாணம் என பேசி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இருக்கும் மொரட்டு சிங்கிள்களில் ஒருவராக அறியப்படுபவர் நடிகர் விஷால். இவர் தற்போது நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி போட்டபோதே, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின்னர் தான், தனக்கு திருமணம் என்று அறிவித்திருந்தார். இப்படியான நிலையில், நடிகர் சங்க கட்டிடம் தற்போது கிட்டத்தட்ட தயாராகி விட்டது என்று கூறுகிறார்கள். அதனால் அதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது.

Actor Vishal WorkOut Video Goes Trending Fans Asking To His Marriage Date
Photo Credit:

இந்நிலையில் விஷால் தான் சொன்னதைப் போல, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி விட்டு திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்ப பேச்சு திரைத்துறையில் பரவலாக பேசப்படும் பேச்சுக்களில் ஒன்றாக உள்ளது. இப்படி இருக்கும்போது, நடிகர் விஷால் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சர்ச்சை: கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு தனது மத கஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்வதற்கான புரோமோஷனில் விஷால் கலந்து கொண்ட போது, அவரால் சரியாக பேச முடியவில்லை, கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால், அவரைப் பார்க்கவே பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. எப்படி இருந்த விஷால் இப்போது, இப்படி ஆக என்ன காரணம் என்று எல்லாம் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இப்படி இருக்கும்போது, அவரது கைகள் நடுங்கியது குறித்து பலரும் பலவிதமாக கட்டுக்கதைகளைக் கூறினார்கள். குறிப்பாக, விஷால் போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார் என்று எல்லாம் கூறினார்கள்.

சாய் தன்ஷிகா: அதன் பின்னர், அதில் இருந்து மீண்டு வந்த விஷால், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99வது படத்தில் விஷால் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். நடிகை சாய் தன்ஷிகாவின் யோகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷாலும் சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்கள்.

Actor Vishal WorkOut Video Goes Trending Fans Asking To His Marriage Date
Photo Credit:

எப்போது கல்யாணம்: மேலும் இவர்களது திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடைபெறவுள்ளது. இன்னும் திருமண தேதி குறித்து இருவரும் அறிவிக்கவில்லை. வரும் 29ஆம் தேதி விஷால் தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். அன்றைய தினத்தில் இருவரும் தங்களது திருமணத் தேதியை அறிவிக்கவுள்ளனர். இதற்கிடையில் தற்போது விஷால் உடற்பயிற்சி செய்துவரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் இனிமேல் கை நடுங்குது, கால் நடுங்குதுனு ஒருத்தரும் சொல்ல முடியாது என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X