Don't Miss!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Technology
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
- Finance
ஆக்ஸிஸ் வங்கி தூள்.. ரூ.5853 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு சான்ஸ் கிடைக்குமா?
- News
சாதாரண ரைஸ் 'ஃப்ரைட் ரைஸாக' மாறிய விசித்திரம்.. குக்கருக்கு அடியில் பார்த்தால் "உவ்வே.."
- Travel
இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு வீரர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
இந்த வசூல் சண்டையை நிறுத்துங்க.. விஷ்ணு விஷால் காட்டம்!
சென்னை : நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளன.
இந்தப் படங்கள் வெளியாகி தற்போது ஒரு வாரத்தை கடந்த நிலையில், இரு படங்களில் எந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முந்தியது என பட்டிமன்றம் வைக்காத குறையாக சண்டை நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் நடைபெற்றுவரும் இந்த களேபரங்களால் தினந்தோறும் இந்தப் படங்களின் வசூல் நிலவரம் குறித்து அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா.. உறுதிப்படுத்திய சன் பிக்சர்ஸ்!

நடிகர்கள் விஜய் -அஜித்
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். கடந்த தலைமுறையில் ரஜினி -கமல் ரசிகர்களிடையே இருந்துவந்த இந்த போட்டி தற்போது விஜய் -அஜித்திடம் கைமாறியுள்ளது. இந்நிலையில் இவர்களின் ரசிகர்கள் தங்களுடைய நாயகன்தான் பெஸ்ட் என்பதை நிரூபிக்க பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் ரிலீசான வாரிசு -துணிவு
விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் இந்த போட்டி மற்றும் சண்டை காரணமாக இருவரின் படங்களும் தொடர்ந்து ஒரே நேரத்தில் ரிலீசாகாமல் இருந்தது. இந்நிலையில் இந்தப் பொங்கலில் இவர்களின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஒரே நேரத்தில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளன.

தொடர்ந்து சர்ச்சை
கடந்த 11ம் தேதி வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், கடந்த சில மாதங்களாகவே இவர்களின் படங்கள் குறித்த டாக்கே கோலிவுட்டில் அதிகமாக இருந்தது. இரு படங்களில் எந்தப் படம் ரசிகர்களை கவரும் எந்தப் படம் வசூலில் முந்தும் என அடுத்தடுத்த சர்ச்சைகளை ரசிகர்கள் கிளப்பி வந்தனர்.

அதிகமான வார்த்தைப்போர்
சமூக வலைதளங்களில் இதுகுறித்த வார்த்தைப்போர் அதிகமாக காணப்பட்டது. அவர்களே சும்மா இருந்தாலும் விமர்சகர்கள் இந்தப் படங்களை விடாமல் பிடித்துக் கொண்டு அதை ட்ரெண்ட் ஆக்கினர். இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் சமமான திரையரங்குகளில் ரிலீசாகி இரண்டு படங்களும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

வசூல் வேட்டையில் படங்கள்
இரண்டு வெவ்வேறு ஜானர்களில் படங்கள் வெளியான நிலையிலும், இரண்டு படங்களும் குறைந்தபட்ச வித்தியாசத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்நிலையில், வாரிசு படம் கடந்த 7 நாட்களில் மட்டுமே 210 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் கோபம்
இதனிடையே துணிவு படமும் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக வலைதளங்களே தீப்பிடிக்கும் வகையில் இந்த விவாதங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இதுகுறித்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹீரோக்களை கொண்டாடுங்கள்
படங்களை படமாக பாருங்கள் என்றும், உங்களுடைய ஹீரோக்களை கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்துள்ள விஷ்ணு விஷால், தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் சண்டை போட வேண்டாம் என்றும் இதை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் கோபமாக ட்வீட் செய்துள்ளார்.