twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாமுடன் ஒப்பிட்டு பாராட்டியவருக்கு விவேக்கின் சிலிர்க்க வைக்கும் பதில்!

    நடிகர் விவேக்கை கலாமுடன் ஒப்பிட்டு பாராட்டியதற்கு விவேக் பதிலளித்துள்ளார்.

    |

    சென்னை: நடிகர் விவேக்கை கலாமுடன் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் பாராட்டியதற்கு விவேக் பதிலளித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

    Actor Vivek about Kalam!

    அப்துல்கலாம் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கும், மாணவர்களின் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கும் இந்திய தேசம் என்றுமே நன்றி பாராட்ட கடமைபட்டிருக்கிறது.

    நகைச்சுவை நடிகரான விவேக், அப்துல்கலாமின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருவதோடு அவரின் சிந்தனைகளை உலகறியச் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அப்துல்கலாம் நினைவாக க்ரீன்கலாம் என்ற அமைப்பைத் தொடங்கி, பல இடங்களில் மரக்கன்றுகள் நடவும், மரக்கன்றுகள் நட மாணாக்கர்களை ஊக்குவித்தும் வருகிறார். இந்த நிலையில் அப்துல்கலாமின் மூன்றாவது நினைவு நாளான இன்று சைதாப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் அழைப்பிதழை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அதற்கு பல்வேறு ரசிகர்கள் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் கலாம் ஐயா மறையவில்லை. அவர் உங்கள் வடிவில் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என ரீட்வீட் செய்துள்ளார்.

    அதற்கு பதிலளித்துள்ள விவேக், இது மிகப்பெரிய வார்த்தை, எனக்கு அருகதை இல்லை. எல்லா மாணவர்களின் உருவிலும் கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என நெகிழ்வோடு சொல்லியிருக்கிறார்.

    English summary
    Former President Dr,APJ.Abdul kalam 3rd death anniversary today. Actor Vivek shared his Geenkalam tree planting invitation on behalf of Kalam anniversary. One of his fan, praised him by comparing with kalam. The actor refused it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X