»   »  நான் இங்கதான் இருக்கேன்னு சொல்லு..!

நான் இங்கதான் இருக்கேன்னு சொல்லு..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விவேக் ஒரு டிவிட்டை ரீடிவிட் செய்துள்ளார். அதில் கபாலி படத்தைத் தழுவி அப்துல் கலாம் பேசுவது போன்ற ஒரு மீம் உள்ளது.

கபாலி காய்ச்சல் இன்னும் போகவில்லை. அதில் இடம் பெறும் கபாலிடா, நெருப்புடா ஆகிய வார்த்தைகளை வைத்து மக்கள் விதம் விதமாக விளையாடி வருகிறார்கள்.

அதேபோல நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற வசனமும் பாப்புலராகியுள்ளது. அதை வைத்து போடப்பட்ட ஒரு மீமை நடிகர் விவேக் ரீடிவீட் செய்துள்ளார்.

ப்ரீத்தி என்பவர் போட்டுள்ள டிவிட்டில், நான் இருக்கேன்னு சொல்லு.. இங்கதான் இருக்கேன்னு சொல்லு. ஒவ்வொரு ஸ்டூடண்ட் மனசிலும் இருக்கேன்னு சொல்லு என்று அப்துல் கலாம் சொல்வது போல போட்டுள்ளனர். அதைத்தான் விவேக் ரீடிவீட் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தனக்களித்த ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற இலக்கில், சுமார் 27 லட்சத்து 35000 மரகன்றுகளை நட்டுள்ளார் விவேக். தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vivek has shared a meme on Abdul Kalam with Rajini's Kabali in twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil