»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

காவிரிப் பிரச்சினையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மிகக் கடுமையாக குரல் கொடுத்தும் கூட, இப்பிரச்சினைக்காக தீவிரமாகப் போராடும் எண்ணம் இல்லை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் தலைமையில்,தமிழகத்திற்குத் தண்ணீர் தராதே என்று வலியுறுத்தி சமீபத்தில் பெங்களூரில் கன்னட நடிகர்கள் ஊர்வலம்நடத்தினர்.

இது தமிழ் திரையுலகில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழனால் உயிர் பிழைத்த ராஜ்குமாரே,தமிழகத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவதா என்றும், தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்தும் சில கன்னடநடிகர்களை கண்டித்தும் இயக்குனர் பாரதிராஜா மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும், பிற தமிழ் திரைப்பட சங்கங்களும் அமைதி காத்து வருகின்றன.பாரதிராஜாவின் கோபகனலைப் பார்த்து மிரண்டு போன தென்னிந்திய நடிகர் சங்கம் அதன் தலைவர் விஜயகாந்த்தலைமையில் அவசரமாக கூடியது.

இக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சினையில் கன்னடத் திரையுலகம் காட்டியது போன்ற தீவிரத்தை தமிழ்த்திரையுலகினரும் காட்டினால், தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என்ற காரணத்தைக் காட்டி, காவிரிப்பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடுவதில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டும், தமிழக, கர்நாடக அரசுகளும் பேச்சுநடத்தி முடிவு காண வேண்டும் என்று கூறி ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தான் நேற்று விஜய்காந்த் ஒரு சொதப்பல் அறிக்கையும் வெளியிட்டார்.

ரஜினி காரணமா?

நடிகர் சங்கத்தின் இந்த முடிவில் திரையுலகில் பல தரப்பினருக்கும் உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது.ரஜினியின் வேண்டுகோளின் பேரில்தான் இந்த முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சங்கம் காவிரிக்காகவும், கர்நாடகத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்தினால் தனக்கு பெரும் தர்மசங்கடம்ஏற்படும் என்பதால் போராட்டத்தைத் தவிர்த்து வேறு வழிகளில் யோசிக்கலாம் என்று ரஜினி விஜயகாந்த்தைக்கேட்டுக் காண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்தே பிரச்சினையை உணர்ச்சி வயப்பட்டு அணுக வேண்டாம் என்று நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாககூறப்படுகிறது.

எப்படியோ, தமிழர்களின் பணத்தில் கோடிகளில் புரளும் தமிழ்த் திரையுலகினர், தமிழர்கள் பாதிக்கப்படும்போதுஅவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடத் தயாரில்லை என்பது வேதனையிலும் வேதனை.

ஆனால் அவர்களுக்கு நிதி வேண்டும் என்றால் கடல் கடந்து நிம்மதியாக வாழும் தமிழர்களையும் விடாமல் துரத்திநாடகம் போட்டு, பாட்டுப் பாடி, மிமிக்ரி செய்து நிதி கேட்டு காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

இன்று சோற்றுக்கு வழியில்லாமல் எலியைப் பிடித்துத் தின்னும் கிராமவாசிகளும் விவசாயிகளும் தான் டூரிங்கொட்டகைகளிலும் தியேட்டர்களிலும் இந்த நடிகர்களின் படத்தைப் பார்த்து அவர்களுக்கு கோடிகளை சேர்த்துககொடுத்தவர்கள்.

தமிழ்த் திரையுலகினரின் நன்றி உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil