திடீரென சம்பளத்தை உயர்த்திய ஐஸ்வர்யா ராஜேஷ்…காரணம் என்ன தெரியுமா!

சென்னை : டிரைவர் ஜமுனா,மோகன் தாஸ், துருவநட்சத்திரம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

இதனால், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள திரைத்துறையிலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தற்போது இவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

நல்ல பெயர்

நல்ல பெயர்

அவர்களும் இவர்களும், சட்டப்படி குற்றம், அட்டக்கத்தி போன்ற படங்களில் இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யரா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து க்ளைமேக்ஸில் அதிரிபுதிரி செய்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

அம்மாவாக

அம்மாவாக

இதையடுத்து, முன்னணி கதாநாயகிகளே நடிப்பதற்கு தயங்கும் கதாபாத்திரத்தில் அதாவது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. ஐஸ்வர்யாகவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

பட்டையை கிளப்பி இருப்பார்

பட்டையை கிளப்பி இருப்பார்

வடசென்னை, கனா திரைப்படங்களை அடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வகையில் கபெ ரணசிங்கம் படத்தில் அறியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பட்டையை கிளப்பி இருப்பார். இந்த திரைப்படம் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது.

கைவசம்

கைவசம்

டிரைவர் ஜமுனா,மோகன் தாஸ், துருவநட்சத்திரம் என்ற படத்திலும், மேலும், மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.ட்ரக் ஜெகதீசன் மற்றும் ரிப்பப்ளிக் என இரண்டு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

சம்பளம் கணிசமாக உயர்வு

சம்பளம் கணிசமாக உயர்வு

எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை அழகாக சாதூர்யமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பல திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், சம்பளம் முக்கியம் அல்ல,கதை நன்றாக இருந்தால் சம்பளத்தை குறைந்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X