Don't Miss!
- News
அதிமுகவையே மொத்தமாக புரட்டிப்போட்ட தீர்ப்பு.. யார் இந்த நீதிபதி ஜெயச்சந்திரன்?
- Technology
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!
- Sports
"சூர்யகுமார் ஒன்றும் அவ்வளவு பெரிய வீரர் இல்லை".. பாக். முன்னாள் வீரர் தாக்கு.. காரணம் பாண்டிங் தான்
- Lifestyle
உங்க கண்களில் இந்த மாதிரி அறிகுறி இருந்தா... அது மாரடைப்பை ஏற்படுத்தும் பிபியோட அறிகுறியாம்..!
- Finance
ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
கோலிவுட் முன்னணி நடிகையோட பேவரிட் ஹீரோவும் விஜய்தானாம்.. யார் அந்த நடிகைன்னு பார்க்கலாமா!
சென்னை : நடிகர் விஜய் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக காணப்படுகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சனங்களை தாண்டி வசூல்மழை பொழிந்து வருகின்றன.
சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான ஹீரோவாக மாறியுள்ள விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அவருக்கு திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். நடிப்பை தாண்டி அவரது படங்களுக்காகவே இவர்கள் ரசிகர்களாக உள்ளனர்.
விஜய்
பட
டைட்டிலை
அபேஸ்
பண்ண
பிகில்
நடிகர்..
பேச்சுலர்
பட
நடிகை
தான்
ஹீரோயினாம்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் சர்வதேச அளவில் தன்னை மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளார். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய இவரது ஹீரோவிற்கான பயணம் தொடர்ந்து தற்போது பீஸ்ட் வரையில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

சர்வதேச கவனம்
விஜய்யின் படங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் சிறப்பான வசூலை பெற்று வருகின்றன. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான அவரது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலை குவிக்க தவறவில்லை. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர்.

வாரிசு படத்தில் விஜய்
இதனிடையே தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாகியுள்ளார். பிரபு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளனர்.

ஏராளமான ரசிகர்கள்
உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக விஜய் காணப்படுகிறார். சாதாரண ரசிகர்கள் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை அனைவருக்கும் விஜய்யை அதிகமாக பிடிக்கிறது. பிரபலங்கள் பலரும் விஜய்யே தனது பேவரிட் நடிகர் என்று கூறுவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

ஐஸ்வர்யாவிற்கு பிடித்த விஜய்
பிரபல இயக்குநர்களும் விஜய்யை வைத்து படமியக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் பிரபல கோலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பேவரிட் ஹீரோ விஜய் தான் என்று கூறியுள்ளார்.

வரிசைகட்டும் இயக்குநர்கள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய தளபதி 67 படத்தில் இணையவுள்ளார். இவரை அடுத்தடுத்து இயக்கவுள்ள இயக்குநர்களின் லிஸ்ட்டில் அட்லி, ஏஆர் முருகதாஸ், சிவா உள்ளிட்டோர் உள்ளனர்.