»   »  ஏ.எல். விஜய் - அமலாபால் உறவில் விரிசல்?

ஏ.எல். விஜய் - அமலாபால் உறவில் விரிசல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஏ.எல்.விஜய், அமலா பால் தம்பதிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்யும் மனநிலையில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதை இரண்டு தரப்பில் இருந்து இதுவரை மறுக்கவும் இல்லை, இந்நிலையில் அமலா பால் திருமணமாகியும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

அமலா பால் படங்களில் நடிப்பது விஜய்க்கு பிடிக்கவில்லை, அவர் கூறியும் அமலா பால் கேட்காதது தான் பிரச்சனைக்கு காரணம் என கூறி வருகின்றனர். இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் - அமலாபால்

விஜய் - அமலாபால்

தெய்வத்திருமகள் படத்தில் தொடங்கியது விஜய், அமலா பால் நட்பு. அமலா பாலை முன்னணி நடிகையாக்கியதில் அந்தப் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதற்குமுன் சிந்துசமவெளி படத்தில் அறிமுகமான அமலா பால் மைனா படத்தில்தான் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்.

தெய்வத்திருமகள்

தெய்வத்திருமகள்

நல்ல நடிகை என்று மைனா பெயர் வாங்கித் தந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில் இடம்வாங்கித் தரவில்லை. அந்நிலையில்தான் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுடன் நடிக்க வைத்தார் விஜய்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கடந்த 2014 ல் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக தொடங்கிய இல்லறம், சமீபமாக தடுமாறுவதாக தகவல். கடந்த சில மாதங்களாக இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.

உறவில் விரிசல்

உறவில் விரிசல்

ஒருபக்கம் விஜய் படங்கள் இயக்குவதில் பிஸியாக இருக்க, நடிப்பதை குறைத்துக் கொள்வேன் என்ற அமலா பால் முன்னிலும் தீவிரமாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், பிரிய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட்

ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட்

அமலாபால் தனது முகநூல் பக்கத்தில் கணவர் விஜய் உடனான புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு விஜய் உடனான எந்த போட்டோவையும் பதிவிடவில்லை.

அமலா பால் சொல்ல வருவது என்ன?

அமலா பால் சொல்ல வருவது என்ன?

இந்த படத்தை மே மாதம் பதிவிட்ட அமலா பால் என்ன சொல்ல வருகிறார் என்றுதான் புரியவில்லை. அம்மா கணக்கு வந்த பிறகு ரொம்பவே பிஸியாகிவிட்டார். பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

விவாகரத்து

விவாகரத்து

அமலா பால் படங்களில் நடிப்பது விஜய்க்கு பிடிக்கவில்லை, அவர் கூறியும் அமலா பால் கேட்காதது தான் பிரச்சனைக்கு காரணம் என கூறி வருகின்றனர். இருவரும் பிரிய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்பதிகள் சொல்வது என்ன?

தம்பதிகள் சொல்வது என்ன?

இருவரும் தங்களது வேலையில் பிஸியாக இருப்பதாலேயே சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. விஜய்யின் தயாரிப்பு நிறுவனத்தை அமலா பால்தான் கவனித்துக் கொள்கிறார். உறவில் விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள்.

English summary
The marriage of one of the best loved couples of South Indian film industry, Amala Paul and AL Vijay.Reportedly, the couple is heading for divorce and both of them have decided to part ways on mutual.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil