Don't Miss!
- News
அனைத்து பேருந்துகளும் தாழ்தளமாக இருப்பது சாத்தியமில்லை.. ஹைகோர்ட்டில் போக்குவரத்து துறை "பரபர" பதில்
- Lifestyle
உங்க மாமியாரிடம் இந்த அறிகுறிகள் இருந்தா... நீங்க ரொம்ப கொடுத்தவச்ச மருமகளாம்...ஏன் தெரியுமா?
- Finance
அம்பானியின் அசைக்க முடியாத நம்பிக்கை.. ரிலையன்ஸ் ஜியோ லாபம் ரூ.4638 கோடியாக அதிகரிப்பு!
- Automobiles
ஓலா, ஏத்தரின் கொட்டத்தை அடக்கத் துவங்கப்பட்டது சிம்பிள் எனர்ஜி ஆலை! தமிழகத்திற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Sports
நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
தனுஷ் கிட்ட அத தேடிக்கிட்டு இருக்கேன்.. என்ன சொல்கிறார் அமலாபால்?
சென்னை : நடிகை அமலா பால், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 12ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது கடாவர்.
இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளதுடன் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் அமலா பால்.
நான்கு ஆண்டுகள் கடுமையான முயற்சிக்கு பிறகு இந்தப் படம் தற்போது ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.
தொடர் வாந்தி...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா நயன்தாரா?...காரணம் இது தானா?

நடிகை அமலா பால்
நடிகை அமலா பால் தன்னுடைய முதல் படமான சிந்து சமவெளியிலேயே அதிரடி கிளப்பியவர். மாமனாரை காதலிக்கும் பெண்ணாக அவர் ஏற்று நடித்திருந்த அந்தக் கேரக்டர்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அதேபோன்ற கேரக்டர்களை ஏற்காமல் மைனா போன்ற கேரக்டர்களில் நடித்து தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார்.

அப்பாவிப் பெண்
இதன்மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். குறிப்பாக மைனாவில் அப்பாவி பெண்ணாக நடித்து ஸ்கோர் செய்தார். இந்தப் படத்தின் சிறப்பான திரைக்கதை, காட்சி அமைப்புகள் ரசிகர்களை கவர்ந்த போதிலும், நாயகியாக நடித்திருந்த அமலா பால், தன்னுடைய அழகான கண்களால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தார். மைனாவாகவே மாறினார்.

தலைவா படத்தில் அமலா பால்
இந்தப் படத்தை தொடர்ந்து, இந்தப் படம் கொடுத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்தார். விஜய்யுடன் தலைவா படத்திலும் நடித்திருந்தார். தனுஷுடனும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தப் படம் நேற்றைய தினம் தன்னுடைய 9வது ஆண்டு கொண்டாட்டத்தை மேற்கொண்டது.

ஏஎல் விஜய்யுடன் திருமணம்
தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து முடிவை வெளியிட்டனர். இதையடுத்து தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார் அமலா பால்.

மீண்டும் அதிரடி
ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் தன்னுடைய அதிரடியை துவங்கினார். இந்தப் படமும் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இதனிடையே தற்போது நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். கடந்த 2018ல் இவரது தயாரிப்பில் அறிவிக்கப்பட்ட கடாவர் படம் வரும் 12ம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சிக்கல்களை சந்தித்த கடாவர்
இந்தப் படம் பல சிக்கல்களை சந்தித்து தற்போது ரிலீசாக உள்ளதாக சமீபத்தில் இவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன்களை சிறப்பாக கொண்டு செல்கிறார் அமலா பால். சமீபத்தில் விஜய் டிவியின் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது சிறுவயது காதல்களை பகிர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

மேஜிக் மிரர் ஷோவில் அமலா பால்
இந்நிலையில் தற்போது சன் மியூசிக்கில் வரும் 12ம் அமலா பால் பங்கேற்கும் மேஜிக் மிரர் நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமலா பால், தனக்கு வைக்கப்படும் கேள்வியை கூறி, பதிலையும் பதிவு செய்கிறார். நெகட்டிவிட்டி, சர்ச்சைகள் இவற்றிலெல்லாம் தான் கவனம் செலுத்துவதில்லை என்றும் கூறுகிறார்.

தனுஷிடம் தேடும் விஷயம்
தொடர்ந்து பேசும் அவர் தனுஷிடம் அதை தேடிக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். தனுஷுடன் அடுத்தடுத்து வேலையில்லா பட்டதாரியின் இரண்டு பாகங்களில் நடித்துள்ள அமலா பால், அவரிடம் எதை அவர் தேடிக் கொண்டிருக்கிறார் என்பதை இன்னும் இரு தினங்களில் ஒளிபரப்பாக உள்ள அந்த நிகழ்ச்சியில் தான் நாம் பார்க்க முடியும்.

தடயவியல் நிபுணராக அமலா பால்
கடாவர் படத்தில் நடிகை அமலா பால் காவல்துறையில் பணிபுரியும் தடயவியல் வல்லுனராக நடித்துள்ளார். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு அவர் எப்படி ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்படுகிறது.