Just In
- 36 min ago
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- 49 min ago
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- 1 hr ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- 1 hr ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
Don't Miss!
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- News
பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது தாவணி டைம்.. அஜித் மகள்.. குட்டி நயன்தாராவின் அடுத்த ரவுண்டு.. அசந்து போகும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரனின் தாவணி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் தேவலோக பெண் என்றும் தேவதை என்றும் வர்ணித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் அனிகா. ஏராளமான மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அனிகா, தமிழ் சினிமாவுக்கு என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
அதில் அஜித்தின் செல்ல மகளாக நடித்தார் அனிகா. அதன் பிறகு நயன்தாரா - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இளம் வயது நயன்தாராவாக குட்டி காதம்பரி கேரக்டரில் நடித்திருந்தார்.
சுஷாந்த் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் இருந்தன.. ஆம்புலன்ஸில் சென்ற நபர் பகீர்.. கதறும் சகோதரி!

அஜித் ரசிகர்கள்
அதனை தொடர்ந்து மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாகவும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்திருந்தார் அனிகா. அடுத்தடுத்து அஜித்துக்கு மகளாக நடித்ததால் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

குட்டி நயன்
அஜித்தின் ரசிக்ரகள் அவரை அஜித்தின் ரீல் மகள் என்றும் நயன்தாரவின் ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து புரமோட் ஆகி ஹீரோயின் கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார் அனிகா.

நடிகைகளுக்கு டஃப்
இதற்காக முன்னணி நடிகைகள் பலருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். நடிகைகளுக்கான அம்சங்கள் இருப்பதை காட்டும் வகையில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அனிகா.

தெறிக்கவிட்ட அனிகா
மாடர்ன் டிரெஸ், சேலை என வளைத்துக் கட்டி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓணம் ஸ்பெஷலாக விதவிதமான சேலைகளில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியிருந்தார். அவரது போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டது.

பாவாடை தாவணியில்
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாவாடை தாவணியில் அசத்தல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் அனிகா. அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் கண்களை நகர்த்தவே விடாதபடி அவ்வளவு அழகாக உள்ளது.

அழகு பதுமை
பிங்க் மற்றும் சிவப்பு நிற காம்பினேஷனில் உள்ள அந்த போட்டோவில் இளம் பதுமையாக அத்தனை அழகாகவும் க்யூட்டாகவும் உள்ளார் அனிகா. நடுவில் அவர் நிற்க நான்கு பக்கம் மலார்களால் படுக்கையை போன்று குடை பிடித்துள்ளார்கள் கேரள பாரம்பரிய உடை உடுத்தியிருக்கும் ஆண்கள்.

குவியும் லைக்ஸ்
மலர் தோரணங்கள் மேலே தொங்க நாற்காலில் உதட்டோரத்தில் புன்னகையுடன் ஒய்யாரமாய் அமர்ந்து கிறங்க வைத்துள்ளார். அனிகாவின் இந்த போட்டோக்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது.

பார்த்துக்கொண்டே..
மேலும் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், தேவதை, பிரீட்டி, பியூட்டிஃபுல், கண்களை நகர்த்தவே முடியவில்லை, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டு என தோன்றுகிறது என வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர்.

அடுத்த நயன்தாரா
இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் குட்டி நயன்தாரா இல்லை, அடுத்த நயன்தாரா நீங்கள்தான் என்று புகழ்ந்துள்ளனர். அனிகாவின் இந்த போட்டோக்கள் இன்டெர்நெட்டில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

ஓணம் வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் அத்தப்பூ கோலம் போட்டு கொண்டாடும் போட்டோவையும் அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த பலரும் அவருக்கு ஓணம் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.