»   »  விஷாலின் 'ரீல்' காதலிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு: போட்டோ இதோ!

விஷாலின் 'ரீல்' காதலிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு: போட்டோ இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை பானு தனது குழந்தையின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் பானு. ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி படம் மூலம் கோலிவுட் வந்தார். மலையாள திரையுலகில் அவர் முக்தா என்று அழைக்கப்பட்டார். தமிழில் பானு என்று அழைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது பெயரை முக்தா பானு என வைத்துக் கொண்டார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த அவர் மலையாள பாடகியான ரிமி டாமியின் சகோதரரான ரிங்டு டாமியை கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வரும் அவருக்கு கடந்த 17ம் தேதி இரவு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பானு தனது குழந்தையின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

ஜூலை 17ம் தேதி இரவு மருத்துவமனையில்- என் காதல் மற்றும் என் குழந்தையுடன் என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Bhanu who made her Kollywood debut with Vishal's Thamirabarani has shared the picture of her new born baby on facebook.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil