Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஊரடங்கு உத்தரவு... ஷூட்டிங் இல்லை... பண்ணை வீட்டில் மகள்களுடன் சிலம்பம் கற்கும் பிரபல நடிகை!
சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் இல்லாமல் இருக்கும் நடிகை தேவயானி, தனது மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார்.
Recommended Video
தமிழில், காதல் கோட்டை, சூரியவம்சம், நினைத்தேன் வந்தாய், நீ வருவாய் என, அழகி உட்பட பல படங்களில் நடித்தவர் தேவயானி.
இப்போது, சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராசாத்தி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
என்ன.. அமலா பால் இப்படி சொல்லியிருக்காங்க.. அட கொடுமையே.. ரெண்டாவது திருமணத்திலும் பிரச்சனையா?

ராஜகுமாரன்
இவரும் இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரன், நீ வருவாய் என, விண்ணுக்கும், மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உட்பட சில படங்களை இயக்கியவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

பண்ணை வீடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர், இயக்குனர் ராஜகுமாரன். அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு பகுதியில் ராஜகுமாரனுக்கு பண்ணை வீடு உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சினிமா பிரபலங்கள்
இதனால் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்பட யாரும் விதிவிலக்கல்ல. நடிகை தேவயானியும் தன் குடும்பத்தினருடன் சந்தியபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் முடங்கி உள்ளார்.

சிலம்பம் கற்கிறார்
அங்கு, இந்த ஊரடங்கு நாட்களை பயனுள்ளதாக்க, அவர் தனது மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார். இதுகுறித்து தேவயானி கூறும்போது, "என் மகள்கள், ஏற்கனவே பரதநாட்டியம் கற்று வருகிறார்கள். தற்போது நானும், எனது மகள்களும் சிலம்பம் கற்று வருகிறோம். நவோபயா என்ற சிலம்ப பயிற்சியாளர் பயிற்சி அளித்து வருகிறார்' என்றார்.