TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
விஜய் சேதுபதியின் மாமனிதன் செட்டில் மயங்கி விழுந்து நடிகை மரணம்

திருவனந்தபுரம்: விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரிடம் பணம் வாங்கிய நடிகை மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.
சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாமனிதன். அந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவில் படப்பிடிப்பு நடந்தது.
அங்கு ஒரு மூதாட்டி வந்து மருந்து வாங்க பணம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்டார்.
|
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி உடனே தனது மேனேஜரை அழைத்து தனது பர்ஸை எடுத்து வரச் சொல்லி அந்த மூதாட்டிக்கு பணம் கொடுத்தார். அவர் பணம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
மருத்துவர்கள்
விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கிய மூதாட்டி செட்டில் இருந்து கிளம்பியபோது மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மலையாள படங்கள்
விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கியவர் மலையாள நடிகை கவலம் அச்சம்மா என்பதும் அவர் ஜெயராமின் ஞான் சல்பேரு ராமன்குட்டி உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்ததும் தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி
மருந்து வாங்க பணம் இல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகை மயங்கி விழுந்து உயிர் இழந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.