Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தளபதி 66ல் விஜய்க்கு அம்மாவாகும் பிரபல நடிகை... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐதராபாத் : தளபதி 66 படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் அடுத்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவ உலகின் இருண்ட பக்கம் '’Human’’.. தமிழில் கட்டாயம் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்!

தளபதி 66 படம்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வசூல்வேட்டையை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். இவர் முன்னதாக தமிழில் கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியவர்.

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்
தளபதி 66 படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகர்கள்
இந்தப் படத்தின் சூட்டிங்கில் நடிகர் ஷாம், யோகிபாபு உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணைந்தனர். இதையடுத்து நேற்றைய தினம் நடிகர் பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் பிரபு படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் பதிலுக்கு இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளனர்.

குடும்ப சென்டிமெண்ட்
படம் குடும்ப சென்டிமெண்ட்டாக உருவாகி வருகிறது. விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடியும் படத்தில் சிறப்பாக இருக்கும் என்று முன்னதாக தயாரிப்பாளர் தில் ராஜூ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் இந்த ஆண்டே தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஜய்யின் அம்மாவாக ஜெயசுதா
ஆனால் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் அழகிய இணைப்பாக முன்னாள் ஹீரோயின் ஜெயசுதா இணைந்துள்ளார். அவர் விஜய்யின் அம்மாவாக இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இவர் முன்னதாக வம்சியின் தோழா படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் இணைந்துள்ளார். படத்தில் நடிகர்கள், நடிகைகள் குறித்து தொடர்ந்து படக்குழு அப்டேட் தெரிவித்து வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

நடிகை ஜெயசுதா
நடிகை ஜெயசுதா ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக, ஹீரோயினாக இருந்தவர். இவரது பல படங்கள் மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். பாலசந்தர் இயக்கத்திலும் இவர் நடித்துள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தில் இவர் நாக்கை சுழற்றி செய்யும் ஒரு செயல் அந்த காலகட்டத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.