Don't Miss!
- News
"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அம்மாவைப் போலவே அழகு..முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய காஜல் அகர்வால்!
சென்னை : நடிகை காஜல் தனது மகனின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை
இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.
நான் 'குடிகாரி' இல்லை...நடிகை காஜல் பசுபதியின் நச் பதில்!

நடிகை காஜல் அகர்வால்
மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

2020ம் ஆண்டு திருமணம்
படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவரின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடந்ததால், இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மாலத்தீவில் ஹனிமூன்
அந்த நேரத்தில் கொரோனா அதிவேகமாக பரவியதால், ஹனிமூன் செல்ல மாட்டார்கள் என்ற செய்தி ஊடகத்தில் பரவியது. ஆனால், இந்த புதுமணத் தம்பதிகள் எதையும் பொருட்படுத்தாமல், மாலத்தீவில் படு ஜோராக ஹனிமூனை கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

அழகான ஆண் குழந்தை
இதையடுத்து, காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இவருக்கு ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். தனது மகனின் போட்டோவை அவ்வப்போது ஷேர் செய்து வரும் நடிகை காஜல் அகர்வால், தற்போது மகனின் விதவிதமான போட்டோவை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

என் தூய அன்பே...
மேலும், அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்.. தன்னலமற்றவராக இருக்கக் கற்றுக் கொடுத்தாய்...தூய அன்பு என தனது செல்ல மகன் நீல் குறித்து நெகிழ்சியாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

இந்தியன் 2 படத்தில்
நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு குழந்தை பிறந்து விட்டதால், இந்தியன் 2 படத்தில் நடிக்க மாட்டார் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், அதை பொய்யாக்கும் வகையில் படத்திற்காக வெறித்தனமாக வொர்க் அவுட்டுகளை செய்து புதுப்பொலிவுடன் கம்பேக் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடையச் செய்தார். மேலும், இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு அனுருத் இசையமைத்துள்ளார்.