Don't Miss!
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
சிவாஜி கதை.. சிட்டி ரோபோ ஹீரோ.. நடிகை கஸ்தூரி எந்த படத்தை சொல்றாருன்னு தெரியுதா?
சென்னை: நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் பதிவிடும் ட்வீட்கள் அவ்வப்போது டிரெண்டாகி விடுகின்றன.
சில சமயங்களில் சில சர்ச்சையான கருத்துக்களையும் தைரியமாக பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் பதிவிட்டுள்ள ட்வீட் இந்த வாரம் வெளியான அந்த படத்தை பற்றித்தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அவரது ட்வீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சூரிய அஸ்தமனத்தில் ஹரீஷ் கல்யாணுடன் உல்லாச படகுப்பயணம்.. அதுல்யாவோட வேற லெவல் வீடியோ!

ஏகப்பட்ட படங்கள்
வார வாரம் பல படங்கள் வெளியாகின்றன. வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வெளியானதுமே விமர்சனத்தை பார்க்கும் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டு, பொறுமையாக 3, 4 வாரங்களில் ஓடிடியிலேயே வெளியாகிவிடும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என உஷாராகி விட்டனர். இந்நிலையில், பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை சாதிக்க முடியாமல் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

தியேட்டரை நோக்கி இழுக்கணும்
நல்ல படங்களாக இருந்தாலும், பெரிய நடிகர்கள் படங்கள் என்றால் தான் பொதுமக்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக சென்று பார்க்கின்றனர். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, டான், விக்ரம் உள்ளிட்ட படங்கள் தான் தியேட்டரை நோக்கி ஒட்டுமொத்த மக்களையும் திரட்டிக் கொண்டு சென்று பெரு வெற்றியை கண்டன. அதே நேரத்தில் சில படங்கள் எதுக்குத்தான் வெளியாகிறது என்றே தெரியாமல் வெளியாகி முதல் நாளுக்கு பிறகு காணாமல் போய்விடும் நிலையையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த வார ரிலீஸ்
தமிழில் இந்த வாரம் தி லெஜண்ட், குலு குலு, விக்ராந்த் ரோணா, ஜோதி உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இந்த 4 படங்களுமே கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்களை அதிக அளவில் ஈர்க்க முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகை கஸ்தூரி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவாஜி கதை
எந்த படம் என்று குறிப்பிடாமல் நடிகை கஸ்தூரி போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது. "சிவாஜி கதை சிட்டி ரோபோ ஹீரோ. I enjoyed it too much !" என அவர் போட்டுள்ள ட்வீட்டை பார்த்ததும் தி லெஜண்ட் படத்தைத் தானே சொல்றீங்க என ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட்டனர். இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தின் கதை சிவாஜி படத்தின் காப்பி என சொல்றீங்களா என லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர்.

நல்ல வார்த்தை சொல்றது
"மொதல் படம் வேற. கொஞ்சம் பாத்து எக்ஸ்ட்ராவா எதுனா நல்ல வார்த்தை சொல்றது...!" என்றும் ஏன் கட்டப்பை கொடுக்கலைன்னு கோவமா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். தப்பா ஒன்னும் சொல்லல கஸ்தூரி தி லெஜண்ட் படத்தை பாராட்டத்தான் செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கஸ்தூரியின் ட்வீட்டுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

லெஜண்டுக்கு பாராட்டு
நல்ல கருத்தை சொல்ல முன் வந்ததற்கும் அதற்காக அத்தனை மெனக்கெடல்களையும் இந்த வயதில் போட்டு நடித்ததையும் நிச்சயம் பாராட்டித் தான் ஆக வேண்டும் என பல சினிமா பிரபலங்களும், படம் பார்த்த ரசிகர்களும் லெஜண்ட் சரவணாவை பாராட்டி வருகின்றனர். முதல் முயற்சியை நல்லா தான் பண்ணியிருக்கார், அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறப்பாக கொடுப்பார் என்றும் லெஜண்ட் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.