Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எனக்கு கமலைத்தான் அதிகமாக பிடிக்கும்.. தயக்கமே இல்லாமல் சொன்ன பர்த்டே பேபி குஷ்பூ!
சென்னை : நடிகை குஷ்பூ இந்திய அளவில் சிறப்பான நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் படங்களையும் சின்னத்திரை சீரியல்களையும் தயாரித்து வருகிறார்.
இன்றைய தினம் நடிகை குஷ்பூ தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
போலீஸுக்கே
தண்ணி
காட்டும்
நடிகை
மீரா
மிதுன்..
பிடிக்க
முடியாமல்
தவிப்பு

நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ இந்திய அளவில் மிகவும் சிறப்பான நடிகையாகவும் சிறந்த தயாரிப்பாளர், டிவி தொகுப்பாளர், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகங்களை காட்டி வருகிறார். இன்றைய தினம் குஷ்பூ தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

முன்னணி நடிகை
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் பல சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகை குஷ்பூ. இந்தியிலும் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜய்காந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மற்ற நடிகைகளுக்கு இல்லாத சிறப்பு இவருக்கு உண்டு.

குஷ்பூவிற்கு கோயில்
தமிழகத்தில் குஷ்பூவிற்கு கோயில் கட்டிய சம்பவமும் நடந்தது. மேலும் இட்லிக்கு குஷ்பூ இட்லி என பெயரிட்டு மகிழ்ந்தனர் ரசிகர்கள். சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டு மருமகளான குஷ்பூ, தொடர்ந்து தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்து வருகிறார்.

பன்முகம் காட்டும் குஷ்பூ
மேலும் சின்னத்திரையிலும் சீரியல் தயாரிப்பாளராகவும், ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார். சன் டிவியில் சீரியல்களை கொடுத்து வந்த இவர் சமீபத்தில் கலர்ஸ் தமிழ் சேனலில் மீரா என்ற தொடரை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தத் தொடரில் சுரேஷ் மேனனுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

பிரபலங்கள் வாழ்த்து
இதனிடையே இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் குஷ்பூவிற்கு கலா மாஸ்டர், பிரசன்னா, சதீஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து குஷ்பூ பதிலுக்கு கமெண்ட் தெரிவித்து வருகிறார்.

கமல்தான் பிடிக்கும்
இதனிடையே, குஷ்பூவின் பிறந்தநாளையொட்டி அவரது பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் குஷ்பூவிடம் ரஜினி, கமல் இருவரில் யாரை பிடிக்கும் என்று கேள்வி கேட்கப்படுகிறது. உடனடியாக தயக்கம் இன்றி, கமலைத்தான் அதிகமாக பிடிக்கும் என்று பளீச்சென்று பதில் அளிக்கிறார் குஷ்பூ.