பிறந்தநாளுக்கு 3 நாட்களுக்கு முன் உயிரிழந்த நடிகை லலிதா...சோகத்தை பகிரும் பிரபலங்கள்
கொச்சி : பிரபல மலையாள நடிகை KPAC லலிதா, தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். அவருடனான நினைவுகளை பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

1948 ம் ஆண்டு காயம்குளம் பகுதியில் பிறந்த லலிதா, மகேஸ்வரி அம்மா என்ற இயற்பெயரை கொண்டவர். தனது 10வது வயதிலேயே லலிதா என பெயரை மாற்றி, நடிப்பை துவக்கினார் லலிதா. பிறகு கேரள மக்கள் கலை கழகத்தில் சேர்ந்த பிறகு தனது பெயரை KPAC லலிதா என மாற்றிக் கொண்டார். அதற்கு பிறகு பிரபலமான இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
டைரக்டர் பரதனை திருமணம் செய்து கொண்ட லலிதா, திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்டார். சிறிது இடைவேளைக்கு பிறகு படங்களில் நடிக்க திரும்பிய லலிதா, கட்டத்தே கிளிக்கோடு என்ற படத்தின் மூலம் 1983 ம் ஆண்டு ரீஎன்ட்ரி கொடுத்தார். சுரேஷ் கோபி லீட் ரோலில் நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூல் பார்த்தது.
நடிகர் இன்னசென்ட் உடன் தான் லலிதா அதிக படங்களில் நடித்துள்ளார். மோகன்லால், சுரேஷ் கோபி என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் லலிதா. பெரும்பாலும் அம்மா வேடங்களிலேயே நடித்துள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார் லலிதா. சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற லலிதா கல்லீரல் நோய் காரணமாக டிசம்பர் மாதம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது 74 வது பிறந்தநாளுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இதனை சிறப்பாகக் கொண்ட அவரது குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர். பிறந்தநாளுக்குள் லலிதா, குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையுடன் அவரது பிறந்தநாள் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு லலிதா உயிரிழந்தார்.
லலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் திரையுலக பிரபலங்கள், அவருடன் பணியாற்றிய அனுபவங்கள், அவருடனான நினைவுகள் ஆகியவற்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அம்பிகா, ராதா போன்ற நடிகைகள் லலிதா உடன் தாங்கள் எடுத்துக் கொண்ட பழைய போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











