Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எந்த பிரார்த்தனையும் கைகொடுக்கல..திடீர் மரணம்..கதறி துடிக்கும் நடிகை குஷ்பு!
சென்னை : பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை குஷ்புவின் அண்ணன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புக்கு என்று தனி இடம் உள்ளது. 80களில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய குஷ்பு இன்று வரை டாப் நடிகையாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் குஷ்பு.
வாரிசுல
விஜய்க்கு
வில்லன்
கிடையாது…
ஆனால்,
ஆக்ஷன்
வேற
மாதிரி
இருக்கும்:
குஷ்பு
சொன்ன
சீக்ரெட்

நடிகை குஷ்பு
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், பிரபு என ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் தனது தடத்தை பதித்து அதில் வெற்றி கண்ட குஷ்பு பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார். சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆண்டிவாக இருக்கும் குஷ்பு, உடல் எடையை குறைத்து வருஷம் 16 ஹீரோயின் போல மாறியுள்ளார். அது மட்டுமில்லாமல் பல சமூக பிரச்சனைகளுக்கு துணிச்சலுடன் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

படங்களில் நடித்து வருகிறார்
சினிமா மீது தீராத காதல் கொண்ட குஷ்பு என்னத்தான் தீவிர அரசியலில் இருந்தாலும்,தேடி வரும் படவாய்ப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பல வருடங்களுக்கு பின் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் குஷ்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ந் தேதி வெளியாக உள்ளது.

அண்ணன் உயிருக்கு போராடுகிறார்
நடிகை குஷ்பு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உருக்கமான பதிவினை ஷேர் செய்து இருந்தார்.அந்த பதிவில் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறிதுகாலம் நான் ஓய்வில் இருந்தேன். எனது மூத்த சகோதரர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார் என்றும் கடந்த 4 நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரார்த்தனை செய்யுங்கள்
எனினும் என்னுடைய சகோதரர் அபுபக்கர் விரைவில் குணமடைய தயவு செய்து எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். குஷ்புவின் இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரைப்பிரபலங்களும் குஷ்புவின் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்தனர்.

இன்று உயிரிழந்தார்
இந்நிலையில், குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இதனை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் தெரிவித்துள்ளார். இதில், எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு அன்புக்குரியவர்களை, விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது.

நிம்மதியாக ஓய்வெடுங்கள்
அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களுக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. நிம்மதியாக ஓய்வெடுங்கள் #Bhaijaan" என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் பலர் அண்ணனின் மறைவுக்கு தெரிவித்து விட்டு குஷ்புக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.