முட்டி வரை கவுன்.. ஃப்ரி ஹேர்.. கூலர்ஸ்.. சிக்கென மாறிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. திணறும் டிவிட்டர்!

சென்னை: நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முட்டி வரை உள்ள கவுனில் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை, இயக்குநர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் அம்மா கேரக்டரில் அசத்தி வருகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். படங்களில் நடிப்பது இயக்குவது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

ஹிட்டான நிகழ்ச்சி

ஹிட்டான நிகழ்ச்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பெரும் ஹிட்டானது. தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் எதிர் கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார்.

லேட்டஸ்ட் போட்டோஸ்

லேட்டஸ்ட் போட்டோஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள லக்ஷ்மி ராமகிருஷ்ணன், அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

முட்டி வரை கவுன்

முட்டி வரை கவுன்

அதாவது பிங்க் நிறத்தில் முட்டி வரை உள்ள கவுனை அணிந்துள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். மேலும் கண்களில் கூலர்ஸ் மற்றும் ஃபிரி ஹேர் விட்டும் செம கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.

இளம் பெண்களை போல்

இளம் பெண்களை போல்

55 வயதான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இந்த போட்டோக்களில் 25 வயது இளம் பெண்ணை போல் காட்சியளிக்கிறார். பார்க்கவே அவ்வளவு க்யூட்டாகவும் அழகாகவும் உள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

நம்பிக்கை பெற்றுள்ளேன்

நம்பிக்கை பெற்றுள்ளேன்

மேலும் இந்த போட்டோவுக்கு, கொஞ்சம் எடையை இழந்துள்ளேன் கொஞ்சம் நம்பிக்கையைப் பெற்றுள்ளேன் ஆரோக்கியமானதா?! இன்னும் இல்லை, ஆனால் நான் அங்கு செல்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

மிகவும் அழகாக இருக்கிறீர்கள்

மிகவும் அழகாக இருக்கிறீர்கள்

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த போட்டோவை பார்த்த நடிகை கஸ்தூரி, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

30 வயதை போல்..

30 வயதை போல்..

இதேபோல் நெட்டிசன்கள் பலரும் அவரது போட்டோவை பார்த்து பிரமித்து போயுள்ளனர். லக்ஷ்மியின் புதிய போட்டோக்களை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கள் 30 வயதுகளில் இருப்பதை போன்று உள்ளீர்கள் என கூறியுள்ளார்.

உங்க தங்கச்சியா?

உங்க தங்கச்சியா?

மற்றொரு நெட்டிசனான இவர் லக்ஷ்மி மேம்மின் தங்கச்சியை பார்ப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். மேலும், "பூக்களே சற்று

ஓய்வெடுங்கள் அவள்
வந்துவிட்டாள், அவள்
வந்துவிட்டாள்..." என்ற பாடல் வரிகளை பதிவிட்டு ஸ்டன்னிங் கார்ஜியஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என்றும் பதினாறாக..

என்றும் பதினாறாக..

மற்றொரு நெட்டிசனான இவர், தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியாலும் மருத்துவரின் ஆலோசனையில் உடலினை உறுதி செய்து உணவினை அளவாக உண்டு என்றும் பதினாறாராக விளங்குகிறீர்கள்

வாழ்க வளமுடன் அம்மா என பதிவிட்டுள்ளார்.

ரோல் மாடல்

ரோல் மாடல்

மேலும் பல நெட்டிசன்கள் அமேஸிங், வாவ், நம்ப முடியவில்லை என ஆச்சரியக்குறியுடன் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பல இல்லத்தரசிகளுக்கு நீங்கள் தான் ரோல் மாடல் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X