Don't Miss!
- News
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் சேலையில் மயில், தாமரை! பரிசாக தந்தது யார் தெரியுமா? சிறப்புகள் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரொம்ப நாள் ஆச்சு..உங்கள இப்படி பாத்து..காதல் பிசாசாக மாறிய நடிகை மீரா ஜாஸ்மின்!
சென்னை : கேரளா புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மினைப் பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சுவிட்டுள்ளனர்.
மாதவன் நடித்த ரன் படத்தின் மூலம் தனது அழகான கண்களை உருட்டி உருட்டி வசியம் செய்து தமிழ் ரசிகர்களின் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்டவர் நடிகை மீரா ஜாஸ்மீன்.
முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்தார்.
அவரு
பாலா
இல்லை..
ஆம்பள
மீரா
மிதுன்..
அசீமின்
அப்படியொரு
ரியாக்ஷன்..
வச்சு
செய்யும்
ரசிகர்கள்!

மீரா ஜாஸ்மின்
சண்டைக்கோழி திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் நடிகை மீரா ஜாஸ்மீன். இந்த படத்தில் அவர் க்யூட்டாகவும், அலப்பறை கொடுக்கும் பெண்ணாவும் நடித்திருப்பார். இப்படத்தில் இடம் பெற்ற தாவணிப் போட்ட தீபாவளி பாடல் இன்று வரை ரசிகர்களின் பிளே லிஸ்டில் பிடித்த பாடலாகவே உள்ளது.

ஏராளமான படங்களில்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் நடித்த பெருமையும் இவருக்கு இருக்கிறது. தமிழ் படங்கள் மட்மில்லாமல் மலையாளத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். ரவி தேஜாவுடன் இவர் நடித்த பத்ரா படம் வசூலை வாரிக் குவித்தது.

விவாகரத்து செய்தார்
நடிகை மீரா ஜாஸ்மீன் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, 2014ம் ஆண்டு துபாயை சேர்ந்த சாப்டவேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். பின்னர் 2016ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தார் மீரா ஜாஸ்மின்.

ரீ என்ட்ரி
தற்போது உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறிய மீரா ஜாஸ்மின், ஜெயராமுக்கு ஜோடியாக Makal என்ற மலையாளப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப்பின் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தை அடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து வருகிறார்.

விட்ட இடத்தை பிடிக்க
தற்போது, மீரா ஜாஸ்மின் தழையத் தழைய வெள்ளை நிறத்தில் பட்டு புடவை கட்டிக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. சினிமாவில் இழந்த மார்கெட்டை எப்படியாவது மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்று படுதீவிரமாக களமிறங்கி உள்ளார் மீரா ஜாஸ்மின்.