2023ல் அதிசயம் நடக்கப்போகுது..குட் நியூஸ் சொன்ன பூஜா ராமச்சந்திரன்!

சென்னை : நடிகை பூஜா ராமச்சந்திரன் 2023ல் அதிசயம் நடக்கப்போகுது என தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயம் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும் அப்படி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பூஜா ராமச்சந்திரன்.

எஸ்.எஸ் மியூசிக்கில் தொகுப்பாளியாக இருந்த இவர், சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

பூஜா ராமச்சந்திரன்

பூஜா ராமச்சந்திரன்

காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஓரளவு பேசக்கூடிய திரைப்படமாக இருந்தது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கை காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஜான் கொக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

ஜான் கொக்கை பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்திருந்தார். கேஜிஎஃப் திரைப்படத்தில் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஜான் கொக்கன், அஜித்தின் துணிவு படத்திலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில், ஜான் கொகைனின் மனைவி பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். எங்களது காதல் கதை ஒரு அழியாத காவியம். எங்கள் காதல், சிரிப்புகள், சண்டைகள் அடங்கியது. முடிவில்லாத உரையாடல், காதல், காமம் மற்றும் அனைத்திலும் நாங்கள் சவாரி செய்தோம். இப்போது எங்களுக்கு ஒரு சிறிய அதிசயம் வரவிருப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

2023 ஆம் ஆண்டு எங்களுடன் இன்னொரு நபர் இணைகிறார் என்று, தான் கர்ப்பமாக இருப்பதையும் விரைவில் குழந்தை பிறக்க இருப்பதையும் பூஜா ராமச்சந்திரன் கணவருடன் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X