»   »  தாய்மையின் தேகங்கள்… அசத்தல் கஸ்தூரி: அதிரவைத்த ஆல்பம்

தாய்மையின் தேகங்கள்… அசத்தல் கஸ்தூரி: அதிரவைத்த ஆல்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாய்மையின் புனிதத்தையும், பெண்மையின் அழகியலையும் வெளிப்படுத்தும் முயற்சியாக தாய்மையின் தேகங்கள் (Bodies Of Mothers) எனும் புகைப்பட ஆல்பம் உருவாக்கியிருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞர் ஜேட் பியல். உலகம் முழுக்க 80 தாய்மார்கள் பங்கெடுத்த இந்த முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி தன் குழந்தையுடன் டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார்.

ஜேட் பியல் என்ற பிரபல புகைப்படக் கலைஞர் தனது வாழ்நாள் புராஜெக்டாக உருவாக்கியிருக்கும் இந்த ஆல்பம், பெண்கள் தற்போது உலகில் அனுபவிக்கும் பிரச்னைகள், வன்கொடுமைகளைக் கடந்து எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் இன்றி தங்களது இயற்கையான அழகை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை மையமாகக் கொண்டிருக்கிறது.

தாய்மையின் உணர்வுகள்

தாய்மையின் உணர்வுகள்

தாய்மையின் பெருமை உணர்த்தும் இந்த புகைப்படத் தொகுப்புகளுக்காக சுமார் ஒரு லட்சம் பெண்களுக்கும் மேல் ஜேட் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அவர்களின் உணர்வுகள், அனுபவங்கள் என அனைத்தும் அந்தப் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன.

இயற்கையான அழகு

இயற்கையான அழகு

பெண்கள் மேலாடையின்றி தன் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் அந்தப் படங்களில் துளி ஆபாசம், கவர்ச்சி, விரசம் என எதுவும் இல்லை. பசுமையான பள்ளத்தாக்கு சலசலத்து ஓடும் நதி என இயற்கையை தரிசிக்கும் அழகுதான் அப்படங்களில் வெளிப்படுகிறது.

தாய்மையின் தேகங்கள்

தாய்மையின் தேகங்கள்

இந்தப் பார்வையில் பெண்கள் உடல்கள் எப்போதும் மதிக்கப்பட, கொண்டாடப்பட வேண்டும் என்பதே ஜேட் பியலின் எண்ணம்! 'தனது புகைப்படக் கருவியில் எப்போதும் உண்மைகளைப் படம்பிடிப்பதே நோக்கம்' எனக் கூறுகிறார் ஜேட்.

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

பிரசவகால பெண்களுக்கும், குழந்தைப் பெற்ற பெண்களுக்கும் இந்த புகைப்படங்கள் அர்பணிக்கப்படுவதாகவும் ஜேட் தெரிவித்துள்ளார். இதில், பிரபல நடிகை கஸ்தூரியும் ஒருவராக இருக்கிறார் என்பதுதான் சிறப்பம்சம்.

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு

ஆத்தா உன் கோவிலிலே படத்தில் அறிமுகமாகி, சின்னவர், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கஸ்தூரி. ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வந்தார் சின்னத்திரையில் குவிஸ் நிகழ்ச்சிகளை நடத்தினார் கஸ்தூரி.

வைரல் ஆன புகைப்படம்

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன் குழந்தையை அணைத்தப்படி டாப்லெஸ் ஆக உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் வைரஸ் ஆனது. இது குறித்து கருத்து கூறியுள்ள கஸ்தூரி. குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் நினைத்த காரியத்தை சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நான் எனது குழந்தையுடன் இருக்கும் இந்த அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார்.

 விசாரிச்சு போடுங்க

விசாரிச்சு போடுங்க

போட்டோ வைரல் ஆன உடனேயே அரைநிர்வாணம், டாஸ்லெஸ் என்ற தலைப்பிட்டு ஊடகங்களில் எழுதியது கண்டு வருத்தப்படும் கஸ்தூரி, என் தொழில் அடையாளம் நடிகையா இருந்தாலும்.. நான் ஒரு அழகான அம்மா. அம்மா எப்படி இருந்தாலும் அழகுதான்னு சொல்ல நினைச்சு எடுத்த போட்டோஸ்தான் அது. சரும சுருக்கம், முகத்துல இருந்த கருமை அதெல்லாம் மறைக்கிற மேக்கப், போட்டோஸ் இல்லாம எடுத்த போட்டோஸ் அது. நம்ம அழகை நாம ரசிக்கணும். முக்கியமா அந்த போட்டோஸ் எடுத்த ஜேட் அவங்களும் ஒரு தாயா, தன் குழந்தையோட போஸ் கொடுத்திருப்பாங்க. இன்னொன்னு... பொண்ணுங்க தேகம் அழகானது, இயற்கையின் அற்புதங்களில் ஒண்ணு. அதை வன்மையா பார்க்காதீங்க, வன்மத்தோட அணுகாதீங்கனு சொல்றதுக்காக நடந்த போட்டோஷூட் என்கிறார்.

English summary
A popular actress Kasthuri posing seminude with her kid for The Bodies of Mothers photography project to highlight motherhood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil