Don't Miss!
- News
"சதுரங்க ஆட்டம்".. கமலாலய வாசற்படியில், அதிமுக புள்ளிகள் "வெயிட்டிங்".. நறுக்குனு சொன்ன தயாநிதி மாறன்
- Finance
90 நாளில் 4.65 லட்சம் கார் விற்பனை.. Maruti Suzuki நிறுவனத்தின் லாபம் 130% உயர்வு..!
- Sports
அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு
- Lifestyle
நீங்க 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவரா?அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Automobiles
டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐயே தூக்கி சாப்பிட்ரும் போல... மைலேஜ் தருவதில் செம்ம கில்லாடி!
- Technology
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
இந்த வயதில் திருமணமா?மறுமணம் குறித்து மனம் திறந்த நடிகை..அவரே சொன்ன விளக்கம்!
சென்னை : தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை பிரகதி மஹாவதி இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை பிரகதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
என்ன இதெல்லாம்..அந்த இடத்தில் டாட்டூ..வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை!

நடிகை பிரகதி மஹாவதி
பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரகதி, தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அம்மா கேரக்டரில் நடித்தாலும், வயசு ஆனாலும் அழகு இன்னும் உன்னைவிட்டு போகல என்ற வசனம் இவருக்கு கச்சிதமாக பொருந்தும். இந்த வயதுலையும் அம்சமா இருக்கிறார்.

இணையத்தில் படு ஆக்டிவ்
நடிகை பிரகதி மார்டன் உடையில் கலர் கலர் புகைப்படங்களை வெளியிடுவது, ஹிட் பாட்டுக்கு ஆட்டம் போடுவது என இணையத்திலேயே பிஸியாக இருக்கிறார். பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தால், ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரகதி போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

விவாகரத்து செய்தார்
தன்னுடைய இருபதாவது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரகதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து, தனி ஒருத்தியாக போராடி இன்று இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார்.

இரண்டாவது திருமணம்
நடிகை பிரகதி சமீபத்தில் மறுமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் கணவரை விட்டு பிரிந்த போது எனக்கு ஆறுதல் கூற, அரவணைத்து வழி நடித்த, ஒரு விஸ்வாசமான நண்பனாக இருக்க ஒரு உறவு தேவைப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட ஒருவரை நான் சரியான நேரத்தில் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

இத்த வயதில் மறுமணமா?
ஆனால், இப்போ எனக்கு 47 வயதாகி விட்டது இப்போது மறுமணத்தை பற்றி என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்து விட்டேன். இதற்கு மேல் ஒரு துணையை தேடுவது என்பது சரியாக இருக்காது. சில சிக்கல்கள் வரும் போது, நான் மிகவும் பிடிவாதமாக இருந்து சமாளித்து அதில் இருந்து மீண்டு இருக்கிறேன் என நடிகை பிரகதி கூறியுள்ளார்.