MR ராதாவின் மனைவி காலமானார்.. உடைந்து அழுந்த ராதிகா சரத்குமார்
சென்னை: நடிகை ராதிகா, நடிகை நிரோஷா ஆகியோரின் தயாரும் சரத்குமாரின் மாமியாருமான கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 86. மறைந்த புகழ்பெற்ற நடிகர் நடிகவேள் ராதாரவியின் மனைவியான இவர் நடிகைகள் நிரோஷா மற்றும் ராதிகா ஆகியோரின் தாயார் ஆவார். இவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகில் பலரும் ராதிகாவும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இவரது உடல் இன்று மாலை 4.30 மணியளவில் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக ராதிகா சரத்குமார் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயார் திருமதி.கீதா ராதா (வயது 86) அவர்கள் இன்று (21.09.2025) மாலை உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரின் உடல் போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது மறைவு தொடர்பாக ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பிரபலங்கள் பலரும் கமெண்ட் செக்ஷனில் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். ஆர்த்தி ரவி, 'அம்மம்மா மிகவும் அற்புதமான மனிதர். உங்களுக்கு அவரது இழப்பை தாங்கும் வலிமை கிடைக்கட்டும் ஆன்ட்டி' என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் தொகுப்பாளினியும் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கீகீ மற்றும் நடன இயக்குநர் பிருந்தா உள்ளிட்டவர்கள், ' கீதா அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இவரது மறைவால் ராதிகா சரத்குமார் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











