அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை..தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை !
சென்னை : அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரையை உட்கொண்டு டிவி நடிகை தற்கொலைக்கு முயன்றுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
கடந்த மாதத்தில் மட்டும் கொல்கத்தாவில் நான்கு சீரியல் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணத்தை விசாரித்தால், மன அழுத்தம், காதலனுடன் சண்டை, குடும்பத்துடன் தகராறு என உப்புசப்பில்லாத காரணம் கூறப்படுகிறது.
எத்தனையோ நண்பர்கள் நம்மை சுற்றி இருந்தாலும், தற்கொலை எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மனம் அனாதையாகி தற்கொலை எண்ணத்திற்கு தூபம் போடுகிறது. இதிலிருந்து விடுபட முறையான சிகிச்சை கட்டாயம் தேவை.

ராய் டெப்லினா டே
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ராய் டெப்லினா டே. இவர் மாடல் அழகியும் நடிகையுமாவார். இவர் வெள்ளிக்கிழமை இரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் தற்கொலைக்கு முன்பான தனது முகநூல் பக்கத்தில் குடும்பத்தினர் மீது புகார் கூறி ஒரு பதிவை போட்டுவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை
முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போஸ்டை சிறிது நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். முகநூல் பக்கத்தில் அவரின் பதிவை பார்த்த யூடியூபரும் நடிகருமான சாண்டி சாஹா அந்த நடிகையைக் காப்பாற்ற மற்றவர்களிடம் உதவி கோரினார். டெப்லினாவை நண்பர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை அறிந்த நண்பர்கள் பூர்பா ஜாதவ்பூர் காவல் நிலையத்தை புகார் அளத்தார். இதையடுத்து போலீசார் உடனடியாக நடிகையின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது டெப்லினா மயங்கிய நிலையில் சுயநினைவு இன்றி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில்
நடிகை டெப்லினா அளவுக்கு அதிகமான தூக்குமாத்திரையை உட்கொண்டு தற்கொலை முயன்றதாகவும் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் குடும்பத்தினர் மீது புகார் கூறியிருந்ததால் போலீசார் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பேர் தற்கொலை
கொல்கத்தாவில் கடந்த மாதத்தில் மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாடல் அழகி மஞ்சுஷா தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, அவரது தோழியும் சக ஊழியருமான பிதிஷா டி மஜும்தார் தற்கொலை செய்து கொண்டார். மே 15ந் தேதி நடிகை பல்லபி தேவும் தனது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 18 வயதே ஆன மேக்கப் கலைஞரும், மாடலுமான சரஸ்வதி தாஸ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

முறையான கவுன்சிலிங்
மாடல் , சினிமா, சீரியலில் நடிப்பவர்களுக்கு எப்போதும் மனதிற்குள் ஓர் அழுத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால், எது சரி.. எது தவறு என யோசிக்காமல் பலர் தற்கொலை முடிவை தேடுகின்றனர். இதுபோன்ற நேரங்களில் உரிய கவுன்சிலிங்கோ, மன உளைச்சலை குறைப்பதற்காக சம்மந்தப்பட்டவர்கள் முறைப்படி கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால். தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடலாம்.


Click it and Unblock the Notifications











