»   »  நடிகை ரம்பா வீட்டு பீரோவில் பூட்டி வைத்திருந்த ரூ.4.5 கோடி நகைகள் கொள்ளை!

நடிகை ரம்பா வீட்டு பீரோவில் பூட்டி வைத்திருந்த ரூ.4.5 கோடி நகைகள் கொள்ளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபல நடிகை ரம்பா வீட்டில் 4.5கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகைகளை தனது மனைவியின் குடும்பத்தினர் திருடிச்சென்றுவிட்டதாக ரம்பாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. தொடையழகி என்று புகழப்பட்ட ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கதிர் இயக்கிய உழவன் படத்தில் அறிமுகமானாலும் 'உள்ளத்தை அள்ளித்தா', சுந்தரபுருஷன் ஆகிய படங்கள் திருப்புமுனை ஏற்படுத்தியது. தொடர்ந்து செங்கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து பிரபலமான ரம்பா, 2010-ஆம் ஆண்டு கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசித்து வரும் ரம்பா, விஜய் டிவி நடன நிகழ்ச்சியின் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார் ரம்பா.

நகைகள் கொள்ளை

நகைகள் கொள்ளை

ரம்பாவுக்கு சென்னையிலும் ஹைதராபாத்திலும் வீடுகள் உள்ளன. தனது நகைகளை ஹைதராபாத் வீட்டில் பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் சகோதரர் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்த போது வீட்டுக்குள் புகுந்த சில மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பீரோவில் இருந்த ரொக்க பணமும் திருட்டு போய் உள்ளது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இது குறித்து ரம்பா சகோதரர் சீனிவாஸ் போலீசில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:

எனது தங்கை ரம்பாவின் நகைகளை வீட்டில் வைத்து இருந்தேன். அவற்றை காணவில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ.4.5 கோடி ஆகும். நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத்தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்திருந்தனர். என்னிடம் ரூ.1 கோடி கேட்டு நிர்பந்தமும் செய்து வந்தார்கள். இந்த நிலையில்தான் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளன. நகைகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

வரதட்சனை கொடுமை

வரதட்சனை கொடுமை

ரம்பாவுக்கும், பல்லவிக்கும் கடந்த வருடம் மோதல் ஏற்பட்டது. ரம்பாவும் சீனிவாசும் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்துவதாக பல்லவி போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனை ரம்பா மறுத்தார்.

குடும்பத்தகராறு

குடும்பத்தகராறு

நான் வெளிநாட்டில் இருக்கிறேன். என் மீது பல்லவி பொய் புகார் அளித்து இருக்கிறார் என்றார். இரு தரப்பிலும் மாறி மாறி போலீசில் புகார் அளித்தனர். தற்போது, மீண்டும் அவர்களுக்குள் குடும்ப தகராறு தலை தூக்கி உள்ளது. அதோடு ரம்பாவின் நகைகளும் கொள்ளை போய் உள்ளது.

அதிர்ச்சியில் ரம்பா

அதிர்ச்சியில் ரம்பா

நடிகை ரம்பாவின் வீட்டில் ரூ 4.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ரம்பாவை மட்டும் இல்லாமல் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
South silver screen’s yesteryear sexiest actress Ramba lost her gold ornaments costing 4.5crores. As indicated by her brother Y.srinivas, relatives ransacked Rambha’s adornments worth 4.5 crs. Addressing media before Banjara Hills police headquarters, Srinivas said his sister Rambha’s jewellary were stolen by his wife Pallavi and her sister Shanti Singh Chauhan, Pallavi’s sibling GHMC Additional Commissioner Ravikiran and his wife, business assessment officer Samyukta

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil