என் வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கனும்… கண்டிஷன் போட்ட ராஷி கண்ணா !

சென்னை : தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் ராஷி கண்ணா.

Recommended Video

Karthi Sardar Dual Role | Rashi Kanna, Rajisha Vijayan | P.S.Mithran, Ponniyin Selvan

கிட்டத்தட்ட அரை டஜன் திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார் ராஷிகண்ணா.

தற்போது இவர், தனது வருங்கால கணவர் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

மெட்ராஸ் கஃபே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதையடுத்து, தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பெங்கால் டைகர், சுப்ரீம், ஜெய் லவ குசா போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார்.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

இதையடுத்து, நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, ஜெயம்ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா,விஜய்சேதுபதியுடன் சங்கத் தமிழன்,துக்ளக் தர்பார் படங்களில் நடித்துள்ளார். அரண்மனை 3,சர்தார், திருச்சிற்றம்பலம், மேதாவி,சைத்தான்கே பச்சா போன்ற தமிழ் திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

லவ் பண்ணல

லவ் பண்ணல

இந்நிலையில், இணையத்தின் மூலம் ரசிகர் ஒருவர், உங்கள் வருங்கால கணவர் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ராஷி கண்ணா, எனக்கு ஆண் நண்பர்கள் இல்லை, இதுவரை லவ் பண்ணது இல்லை , எனது வாழ்க்கை துணையை கண்டுபிடிக்கும் போது நிச்சயம் அனைவருக்கும் சொல்வேன் என்றார்.

என் வருங்கால கணவர்

என் வருங்கால கணவர்

எனக்கு வரும் கணவர் அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை. ஆனால் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

பிடித்தவர்கள்

பிடித்தவர்கள்

மேலும், பிடித்த நடிகர், நடிகைகள் குறித்த கேள்விக்கு, எனக்கு எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும், குறிப்பா சொல்லனும்னா தளபதி விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரையும் பிடிக்கும் என்றார். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட ஆசை என்றார். கதாநாயகிகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோர் மிகவும் பிடித்தவர்கள் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X